சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற சவூதி கலை மற்றும் பண்பாட்டு மையம் தம்மாமில் நான்கு நாட்கள் சர்வதேச அரபுக் கவிஞர்கள் மாநாட்டை 2015- இல் நடத்தியது.
அந்த மாநாட்டில் நான் திருக்குறளை அரங்கேற்றம் செய்தபோது அரபுக் கவிஞர்கள் திருக்குறளை மிகவும் ரசித்தார்கள். பாராட்டினார்கள். சவூதி அரேபியாவில் அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கியம் ‘திருக்குறள்’ என்ற சிறப்பு இதன் மூலம் கிடைத்தது.
திருக்குறள் அரபு மொழியாக்கப் பணியைப் பற்றி பேசும்போதெல்லாம் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி, ‘புலால் மறுத்தலை முஸ்லிம்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’ என்பது.
ஹலால் – ஹராம்
இஸ்லாத்தில், ஹலால் – அனுமதிக்கப்பட்டவை, ஹராம் – தடை செய்யப்பட்டவை என்கிற இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன. ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பது பற்றி ஹலால் – ஹராம் சட்டங்கள் பேசுகின்றன.
என சொல், செயல், எண்ணம், பழக்கவழக்கங்கள் என மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் “ஹலால் – ஹராம்’ பேணப்படவேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்த வகையில் எதை உண்ணலாம் எதை உண்ணக் கூடாது என்று திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
‘ஹலால்’ என்பது அசைவ உணவை மட்டும் குறிக்கும் சொல்லாடல் அன்று. அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் குறிக்கும். புலால் உணவைப் பொறுத்தவரை ஆடு, மாடு, ஒட்டகம், கோழி உள்ளிட்ட
கால்நடைகளையும் பறவைகளையும் முறைப்படி அறுத்து உண்பதற்கு Read More….