Skip to content

திருக்குறளுக்கு என்று ஒரு தனி பதிப்பகம்..

இனி திருக்குறள் நூல்களை ஒரே இடத்தில் உங்களுக்குத் பிடித்தவகையில், பிடித்த உரையை (நாட்டுடைமையாக்கப்பட்டவை) அச்சடித்துப் பெறலாம், நிகழ்ச்சிகளில் பரிசாக வழங்க பயன்படுத்தலாம். உலக நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்கள் கிடைப்பதில்லை என்பதை சரிசெய்ய, இந்தியா அமெரிக்காவில் அந்தந்த நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள பதிப்பகங்களை தொடர்புகொண்டு சென்னையிலிருந்து வெளியிட முயற்சி நடக்கிறது. இனி மொழிபெயர்ப்பு நூல்களைத் தேடி ஒவ்வொரு இடமாக அலையவேண்டியதில்லை.

இதற்காக தனித்த கவனம் செலுத்த திருக்குறள் ஆர்வம் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சேர்க்கப்பட்ட நூலகள் :
1. திருக்குறள் Thirukkural: The Holy Scripture, தங்கப்பதிப்பு , சிகாகோ
2. Thirukkural Translations in World Languages
3. நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை
4. திருக்குறளார் வழங்கும் திருக்குறள் தெளிவுரை
5. Thirukkural Book Custom Printing (You choose any size, any design, any author)
6. திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு – இந்திரஜித்

பிற நூல்கள்:
——————-
1. வலைத்தமிழ் ஒத்துழைப்பில் தமிழியக்கம் வெளியிட்ட “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்” நூல்

வீடுதோறும் திருக்குறள் நூல் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த திருக்குறளை பரிசுப்பொருளாக பிறந்தநாள் விழா, திருமணம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவோம்.

இணையத்தில் பெற: https://estore.valaitamil.com/