Skip to content

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். ( குறள்- 899)

பாமரருக்கும் பரிமேலழகர்-
சின்னசாமி இராஜேந்திரன் உரை

மிகவும் கடினமான உயர்த்த விரதங்களைக் கடைப்பிடித்து வாழும் அருத்தவர் கோபம் கொண்டால், அத்தகையவரது ஆற்றலால்இந்திரனும் தனது பதவியை இடையிலேயே இழந்துவிடுவான்

“வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் 5 ஆம் சூத்திரம்) – இந்திரனும் காதலித்த தண்புணல் நாடு – இந்திரனும் ஆசைப்பட்ட குளிர்ந்த நீர்வளம் உடைய நாடு என்பது இதன் பொருள்.

முன்னொரு காலத்தில் நகுடன் என்னும் சந்திரகுலத்து அரசன் இருவன் நூறு அசுவமேத யாகம் இயற்றி தான தருமங்கள் செய்து இந்திர பதவி அடைந்தான்

இந்திர பதவி பெற்ற செருக்காலும், இந்திராணி மேல் வைத்த மோகத்தாலும், தனது பல்லக்கைத் தாங்கி இந்திரலோகத்துக்குச் சுமந்து செல்லும் ஏழு முனிவர்களுள் மெதுவாக நடந்து செல்லும், உருவத்தில் குள்ளமாக இருக்கும் அகத்தியரைப் பார்த்து (ஸர்ப்ப ஸர்ப்ப) ‘விரைவாக! விரைவாக! என்று கூறினான்

அதைக் கேட்டு அருந்தவ முனிவர் அகத்தியர் கோபம் கொண்டு, ‘தீ ஸர்ப்பமாவாயாக’ என்று நகுடனை சபித்தார்.

அருந்தவமியற்றி இந்திர பதவி பெற்று இந்திரலோகம் செல்லும் வழியில் இடையில் இப்படி நடந்ததால், அவன் முயன்று பெற்ற தனது இந்திர பதவியை இழந்து, உடனே பாம்பாக மாறி நிலத்தில் வீழ்ந்தான், இக்கதையின் விரிவை திருவிளையாடற்புராணம் இந்திரன் ‘பழிதீர்த்த படவத்தில் காண்க’ இந்தத் தொன்மத்தை உள்வாங்கிக் கொண்டு வள்ளுவர் இவ்வாறு கூறினார்.

இந்த நான்கு குறள்களாலும் (896, 897, 898, 899), தவமுனிவரை அவமதிப்பதால் ஏற்படும் குற்றம் கூறப்பட்டது.

Even the mightiest of kings can perish midway If men of high repute burst in rage. (Kural 899)

A person who lives by observing very difficult and elevated fasts, gets angry, due to their acetic power. even Indra will not complete his term and lose his position midway.

“The world where the king rules over the coolwaters” (Tolkappiyam, Porulathikaram, Agathinaiyiyal Sutra 5) – Indra too fell in love with the land of cool waters – this means the land rich in cool water that even Indra desired.

Once upon a time, a king named Nahusha of the lunar dynasty performed a hundred Ashwamedha Yagas and attained the position of Indra through his generosity and righteousness.

He was on the way to assuming the position as Indra. Seven sages werecarrying his palanquin to Indraloka . Nahusha noticed Agastya, who was walking slowly as he was dwarfish in appearance. Due to the arrogance of attaining the position of Indra and the infatuation he had for Indrani, he looked at Sage Agastya and said to him (Sarpa Sarpa) ‘Faster! Faster!’.

Hearing this, the great sage Agastya got angry and cursed Nahusha, saying ‘May you become a serpent’.

Due to this incident that occurred midway on his journey to Indraloka after attaining the position of Indra through great penance, Nahusha lost his hard-earned position of Indra immediately and fell to the earth as a serpent.

The full details of this story can be found in the Thiruvilaiyadal Puranam under ‘Indra’s Redemption’.

Taking this ancient story into account, Valluvar authored this couplet. These four Kurals (896, 897, 898, 899) describe the sin that arises from disrespecting ascetic sages.