- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-71 12/07/2024
July 12 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-71
நூல்: ‘அழகர் விருந்து’ புலவர் இரா. உ. விநாயகம் சொற்பொழிவுகள்
தொகுப்பாசிரியர்: மேலகரம் எஸ். முத்துராமன் MA.,BEd.,
நயவுரையாளர்: இராம. தீத்தாரப்பன், செயலாளர்-தென்காசி திருவள்ளுவர் கழகம்
நாள்:- 12/07/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல் மற்றும் தொகுப்பாசிரியர் குறிப்பு:
புலவர் இரா. உ. விநாயகம் அவர்கள் சின்னஞ் சிறு வயது முதலே, தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் தொண்டாற்றி வந்தவர். அவரது சொற்பொழிவுகளை நூலாக்கித் தொகுத்தவர் மேலகரம் எஸ். முத்துராமன் அவர்கள். புலவர் விநாயகம் திருக்குறளையும், பரிமேலழகர் உரையினையும் எழுத்தெண்ணிப் படித்த மேதை. பரிமேலழகர் மீது கொண்ட எல்லையற்ற அன்பால் ‘பரிமேலழகர் அடிப்பொடி’ என்று பெயர் பொருத்தி பெருமிதம் கொண்டவர். சொல்லாற்றல் மிக்க அறிஞர்களின் கட்டுரைகளை விரும்பி படித்து, விருத்தி உரைக்கும் ஞானம் கொண்டவர். திருப்புகழ் இசையில் தோய்ந்த இசைக் கலைஞர். தம் வாழ்நாள் முழுதும் (பரிமேல்)அழகர் பணிக்கும் ,அன்பர் பணிக்கும் தம்மை ஆளாக்கிக் கொண்டவர்.
தொகுப்பாசிரியர் மேலகரம் எஸ். முத்துராமன் அவர்கள் தேர்ந்த தமிழ்க் கவிஞர். பற்பல நூல்களுக்கு ஆசிரியர். வானொலி மூலம் பல நாடகங்களை உருவாக்கிப் பரிசுகள் பல பெற்றவர். திருக்குறளுக்கு ஒருவரி உரை எழுதி திருக்குறளுக்குப் பெருமை சேர்த்தவர். நாடகவியல் என்ற முழு நாடக இலக்கணத்தை இயற்றி நூறாண்டுகால இடைவெளியை நிரப்பியவர்.
நயவுரையாளர் குறிப்பு:
தற்போது தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராக குறள்பணி ஆற்றி வரும் இராம. தீத்தாரப்பன் அவர்கள், இரசிகமணி டிகேசி அவர்களின் கொள்ளுப்பேரன் ஆவார். திருக்குறள் கழகப் பணிகளில் நாள்-பொழுது கருதாது செயலாற்றுபவர். இந்தியன் வங்கியில் காசாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தென்காசி கழகத்தில் நீண்ட நாள் தொண்டாற்றிய இவர், 2002 வருடம் கழகத்தின் துணைச்செயலாளராக பொறுப்பேற்றார். பின்பு பொருளாளராகப் பணியாற்றி, தற்போது செயலாளராகவும் தொடர்கிறார்.மறைந்த பெருமக்கள் கணபதிராமன் தலைவர் ,ஆ சிவராமகிருஷ்ணன் செயலர் தெனகாசி திருவள்ளுவர் கழகம் ஆகியோரின் வழி காட்டுதலில் பல்லாண்டு காலம் குறள் பணியில் தேர்ச்சி பெற்றவர். “ரசிகமணி டிகேசி காலந்தொட்டு எங்கள் குடும்பத்தார் எல்லோரும் கழகத்தோடு தொடர்புகொண்டுள்ளனர்”, எனப் பெருமையுடன் கூறும் பண்பாளர். நயமுற பேசும் நாவலர்.