Skip to content

திருக்குறளில் செயல்திறன் (1984) கி ஆ பெ விஸ்வநாதம்

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தலைப்புக்கள் 133 இல்லை. குறிப்பறிதலுக்கு இரண்டு தலைப்புகள்; நட்புக்கு ஆறு தலைப்புகள் (நட்பு, நட்பு ஆராய்தல்,பழைமை, தீ நட்பு, கூடாநட்பு, சிற்றினம் சேராமை); செயல் திறனுக்குப் பன்னிரண்டு தலைப்புகள். இதிலிருந்து வள்ளுவர் செயல்திறனை மக்களாய்ப் பிறந்தவர்கள் கட்டாயம் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் என நன்கு தெரிகிறது,

அத் தலைப்புக்களிலும் கால் பகுதியில் மூன்று ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை, ஊக்கம் உடைமை என்பன.

அரைப்பகுதியில் மூன்று; தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் – என்பன.

முக்கால் பகுதியில் மூன்று; வலியறிந்து செய்தல், காலம் அறிந்து செய்தல்,இடன் அறிந்து செய்தல்- என்பன.

முழுப்பகுதியில் மூன்று; வினைத்தூய்மை, வினைத் திட்பம், வினை செயல்வகை-என்பன.

திருக்குறளில் எந்தப் பொருளுக்கும் இத்தனை தலைப்புக்களில்லை, இதிலிருந்து மக்களாய்ப் பிறந்தவர் களுக்குப் பெரிதும் வேண்டுவது செயல்திறனே என்று தெரிகிறது,

செயல்திறனைப் பன்னிரண்டு தலைப்புக்களில் நூற்று இருபது குறள்களில் மட்டும் வள்ளுவர் விளக்கவில்லை. “செய்” என்ற சொற்களும், அதைத்தழுவிய சொற்களுமாக 53 சொற்களை 215 குறள்களில் பதித்துச் செயல்திறனைப் புகுத்தியிருக்கிறார்,

அவையாவன:-

விரிவை சிறு நூலில் (30 பக்கங்கள் )காண்க …

தொகுப்பு
சி இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
www.voiceofvalluvar.org
30/06/24

(முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விஸ்வநாதம் நூல்களை தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்

https://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-85.htm)