Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-52 23/02/2024

February 23, 2024 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-52

வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-2)
நூலின் முதல் அத்தியாயமான ‘வள்ளுவர் நெஞ்சம்’ குறித்த நயவுரை

நாள்: 23/02/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். தமிழக அரசால் ‘திருவள்ளுவர் விருதும்’, குன்றக்குடி ஆதினத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டமும் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினரால் ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.

‘வள்ளுவர் நெஞ்சம்’ (அத்தியாயம்-1) குறித்த நயவுரை: திரு சி. இராஜேந்திரன் I.R.S. (Retd)

நயவுரையாளர் திரு சி. இராஜேந்திரன் I.R.S.(Retd), அவர்கள் இந்திய வருவாய்ப் பணியில் (1985-2019) இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூரில் இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய அனுபவம் உடையவர். மத்திய அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், இவருக்கு 2003-ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டது. “திருக்குறள் உவமை நயம் (2007)” என்பது திருக்குறள் குறித்த இவரது முதல் நூலாகும். பலரது பாராட்டையும் பெற்ற “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற 1,890 பக்கங்கள் கொண்ட இவரது நூல், பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது (2018). வள்ளுவத்தின்பால் ஈர்ப்பும் ஆர்வமும் கொண்ட 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உடைய ‘Voice of Valluvar Family’ என்னும் டெலிகிராம் சமூக ஊடகப் புலனத்தையும், www.voiceofvalluvar.org என்ற இணைய தளத்தையும் நண்பர்களோடு சேர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிப் பாராட்டியுள்ளன. திருக்குறள் சார்ந்த பயிற்சி பட்டறைகளை பல்வேறு தளங்களில் பல்வேறு இடங்களுக்கும் சென்று நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு இதே நேரம்

Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID: 988 6476 9563
Passcode: 1330

Details

Date:
February 23, 2024
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,

Venue

Chennai
Chennai, India