- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-47 19/01/2024
January 19, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-47
நாள்: 19/01/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி
நூல்:
வள்ளுவர் கண்ட நாடும் காமமும்(பகுதி-II)
ஆசிரியர்: பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
தமிழ்க்கடல் என்றும், பல்கலைச்செல்வர், பன்மொழிப்புலவர் எனப் பலவாறாக தமிழுலகம் அறிந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூலிது. இக்கட்டுரைகள் ‘திருக்குறள்’ மாத இதழிலும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் மணிவிழா மலரிலும் வந்தனவாகும். வள்ளுவர் உணர்த்தும் ‘நாடு’ குறித்த கருத்துக்களை பல்வேறு தலைப்புக்களில் விளக்குவது முதல் பகுதியாகவும், தமிழர் பண்பாட்டின் உயர்ந்த கருவூலமாக விளங்கும் காமத்துப்பால் குறித்த கட்டுரைகள் பிற்பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்நூலை பழனியப்பா பிரதர்ஸ் (1954) பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் அ. மோகனா
மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் விலாச நூல்கள் (2012), தமிழ் அச்சுமரபுசார் பதிவுகள் (2016), தேவார யாப்பியல் (2018, முனைவர் பட்ட ஆய்வு), சங்க இலக்கியம்: வடிவம் – வரலாறு – வாசிப்பு (2021) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் அண்மையில் சாகித்திய அகாதெமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் அமைந்த பேராசிரியர் தொ. பரமசிவன் (2023) குறித்த நூலையும் எழுதியுள்ளார். காஞ்சி: ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பெண் எழுத்துகள்-பன்முக வாசிப்பு ஆகிய நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். சங்க இலக்கியம், யாப்பியல், சுவடியியல், பதிப்பியல், கல்வெட்டியல், இதழியல் எனப் பன்முகப்பட்ட ஆய்வுப் புலங்களில் இயங்கி வருபவர்.
ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை
இதே நேரம், இதே இணைப்பு.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330