- This event has passed.
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நிகழ்ச்சி – 23/11/2023 & 24/11/2023
November 23, 2023 - November 24, 2023
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருக்குறள் நூல்களை வழங்கும் நிகழ்வு.
இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார்
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலகத் தமிழ் வளர்ச்சி மந்திரத்துடன் இணைந்து , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் 80000 திருக்குறள் நூல்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குவழங்கும் திட்டத்தில் முதல்கட்டமாக 40000 திருக்குறள் நூல்கள் அனுப்பப்பட்டு ( தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் +புதுச்சேரி , காரைக்கால் ) , அந்தந்த மாவட்ட அரசு நிர்வாகத்தால் , தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டு வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இதை நேர்த்தியாக செய்துவருகிறார்கள். சென்னை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சென்னையில் உள்ள நிர்வாகிகள் நேரில் கலந்துகொள்கிறோம்.
• மாவட்ட திருக்குறள் அமைப்புகளுடனும்’இணைந்து திருக்குறள் நூல்களை இலவசமாக வழங்குதல்,
• இலவச முற்றோதல் பயிற்சி வழங்குதல்,
• புரவலர்களை அடையாளம் கண்டு மாவட்ட அளவில் பகுதிநேர /முழுநேர ஆசிரியர்களை திருக்குறள் கற்றுக்கொடுக்க நியமித்தல்.
• அரசு வழங்கும் ரூபாய் 15000 திருக்குறள் முற்றோதல் பரிசை , சான்றிதழைப் பெற மாணவர்களை அதிக அளவில் அனைத்து மாவட்டத்திலும் தயார்படுத்துதல்,
• இதுவரை கடந்த 25 ஆண்டுகளில் 1330 திருக்குறளை முடித்தவர்கள் வாழ்க்கைத் தரத்தை ஆராய்ந்து அனைவரையும் இணையத்தில் வெளியிட்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்(சுமார் 1200 பேர்).
• 1330 திருக்குறள் முடித்து முற்றோதல் செய்தவர்களுக்கு “திருக்குறள்-இளநிலை ” சான்றிதழ் வழங்குதல்.
• பொருள் உணர்ந்து ,நேர்காணலில் கலந்துகொண்டு தெரிவு பெறுபவர்களுக்கு “திருக்குறள்-முதுநிலை” சான்றிதழ் வழங்குதல்
• திருக்குறள் இளநிலை ,முதுநிலை முடித்தவர்களை அறம் சார்ந்தவர்களாக் கருதி , அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப் படிப்பு, தொழில் வாய்ப்பு என அனைத்திலும் முன்னுரிமை வழங்கும் சூழலை ஏற்படுத்துதல்.
• அனைவரும் திருக்குறளை வீடுகளில் குடும்பமாகக் கற்று ஒரு அறம் சார்ந்த ,அமைதியான, நிறைவான, மகிழ்ச்சியான வாழ்வியலை முன்னெடுத்து ஒரு முன்மாதிரி சமூகமாக தமிழ்ச்சமூகம் இயங்க துணைநிற்றல்.
என்று பல திட்டங்கள்..
உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு, உங்கள் ஊருக்கு, மாவட்டத்திற்கு,நாட்டிற்கு திருக்குறளை முறையாக பயிற்றுவிக்க எங்கு செல்வது என்று கவலை வேண்டாம்.. தகுதியான , தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் , ஒழுங்குசெய்யபட்ட பாடத்திட்டம், 30 ஆண்டுகளுக்கு மேல் திருக்குறளில் அனுபவம் கொண்ட ஆளுமைகள் குழு இருக்கிறது.. பயன்படுத்திக்கொள்ளுங்கள். திருக்குறள் பற்றாளரா? திருக்குறள் ஆர்வம் கொண்ட தொழில்செய்பவரா? உதவ ஆர்வம் கொண்டவரா? உங்கள் மாவட்டத்திற்கு உரிய உதவியை செய்ய புரவலராக பெற்றுபெற்றுக்கொள்ளுங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்யும் திருக்குறள் எல்லப்பன் அவர்களின் தொடர்ச்சியாக அவரது பயிற்றகத்திலிருந்து உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட பயிற்சியாளர்களாக மாவட்டம் முழுதும் திருக்குறள் பரப்பும் முற்றோதல் ஆசிரியைகள் திருமதி.கற்பகவள்ளி , திருமதி.சிந்தாமணி ஆகியோரும், சென்னை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் திருக்குறள் பழனி அவர்களும் போற்றத்தக்கவர்கள்.
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர்
kural.mutrothal@gmail.com