- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-39 17/11/2023
November 17, 2023 @ 6:30 pm - 8:00 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-39
நாள்: 17/11/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி
நூல்: மரணமிலாப் பெருவாழ்வு
ஆசிரியர்: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்
நூல் குறிப்பு:
இந்நூல் இம்மண்ணுலகில் வாழ்ந்து மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற ஞானியர்களின் வாழ்வையும் அவர்கள் வழியில் மற்றவர்களும் மரணமிலாப் பெருவாழ்வு பெற வளர்த்துக்கொள்ளவேண்டிய பண்புகளான ஒழுக்கம், மனத்தூய்மை, வாய்மை, அவாவின்மை, பற்றற்ற மனநிலை, ஒப்புரவறிதல் போன்றவற்றையும் எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துகிறது.
மனித வாழ்வில் நிலையானது நிலையாமைதான் என்பதை உணர்த்தி மரணம் வந்தே தீரும் ஆனாலும் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம் அது எப்படி என்பதை மெத்தப் படித்தவர் என்றில்லாமல் சாதாரண எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் சான்றோர்களையும் ஞானியர்களையும் சாட்சிக்கு வைத்துக்கொண்டு எளிமையாக எடுத்துரைக்கின்றது.
பல்லாண்டுகாலமாக பக்தி இலக்கியங்களிலும் சித்தர் இலக்கியங்களிலும் தோய்ந்து ஆய்ந்த அனுபவப் பிழிவாக பேரா. அரங்க. இராமலிங்கம் அவர்கள் இயற்றிய மரணமிலாப் பெருவாழ்வு என்ற இந்நூல் வாசிப்பவரின் மனங்களிலே அறியாமை இருள் மறைய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.
நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் ச. நீலமேகன், காஞ்சிபுரம் ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் “மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்” என்ற பொருண்மையில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர். சிறுகதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடையவர். சமூகச் சிந்தனையாளர்.
ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை
இதே நேரம், இதே இணைப்பு.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org
Karka Kasadara
9445543442
trust@karka.