Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-29 08/09/2023

September 8, 2023 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-29

நாள்: 08/09/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: திருக்குறள் உவமை நயம்
ஆசிரியர்: சி. இராஜேந்திரன் IRS (Retd)

இந்த நூலில் திருக்குறளில் பயின்று வரும் உவமைகள் எளிய நடையில் நயம்பட விளக்கப்பட்டுள்ளன. முப்பாலிலும் கருத்திற்கு எழிலூட்டும் பாவிற்கு சுவையூட்டும் 238 உவமைகளை விளக்கி வரைந்துள்ளார் ஆசிரியர் சி. இராஜேந்திரன் IRS (Retd). கவிதா பப்ளிகேஷன் (2007) இந்நூலை பதிப்பித்துள்ளது. ஆசிரியர் சி. இராஜேந்திரன் IRS (Retd) அவர்கள் வள்ளுவர் குரல் குடும்பம் என்னும் இணைய வழி இயக்கத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடாத்தி வருபவர். பாமரருக்கும் பரிமேலழகர் (2019) என்ற நூலையும் தமிழ் உலகிற்கு நல்கியுள்ளார்.

நூல் அறிமுகம் செய்வார்: திரு சோம இளங்கோவன்

தென்காசியில் பிறந்தவர். கணிப்பொறி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
இளம் வயதிலேயே அமரர் பிரம்மஸ்ரீ ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் திருக்குறள் பயிலும் பேறு பெற்றவர். அப்பொழுதிருந்தே அவர் தன்னை தென்காசி திருக்குறள் கழகப் பணிகளில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். பிரம்மஸ்ரீ ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்களால் “கழக மாணவன்” என்றழைக்கப்பட்டவர். 35வது வயதில் ஆய்க்குடி அமர்சேவாசங்கத்தில் திருக்குறள் மனனப்போட்டியில் கலந்துகொண்டு 54 நிமிடங்களில் 1330 குறள்களையும் ஒப்புவித்து, முதல் பரிசு பெற்றார். இந்தத்தருணமே தனது வாழ்வில் பெருமைக்குரிய தருணமாகக் கருதுகிறார்.

Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org

Karka Kasadara
9445543442
trust@karka.in

 

Details

Date:
September 8, 2023
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,

Venue

Chennai
Chennai, India