- This event has passed.
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர்
August 23, 2023 @ 6:45 pm - 7:45 pm
வணக்கம்,
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 23.08.2023 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்:
திரு K.S.கணேசன்
நூல்:
நெடுவழி விளக்குகள்:
தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
ஆசிரியர்:
திரு.ஸ்டாலின் ராஜாங்கம்
இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் நிகழும்
லிங்க்:
https://meet.google.com/qwy-pozz-oei
பேச்சாளர் பற்றி:
ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இந்த வார பேச்சாளர் திரு K.S.கணேசன் அவர்கள், கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு மாநில கமிட்டியில் உதவி செயலாளராக பணியாற்றியவர். இவரது மொழிபெயர்ப்பு கட்டுரைகள் ஜனசக்தி இதழில் வெளிவந்துள்ளன. இதற்கு முன்னர் புதன் வாசகர் வட்டத்தில் “தண்டி யாத்திரை”, “தோழர் காந்தி” , “காந்தி ஒரு புதிர்?” மற்றும் “அரிஜன அய்யங்கார்” போன்ற நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.
நூல் பற்றி:
கவனிக்காமல் விடப்பட்ட தலித் பங்களிப்பை விரிவான தகவல்களோடு ஆழமான ஆய்வு நோக்கில் காலப் பொருத்தப்பாட்டுடன் இந்நூல் முன்னிறுத்துகிறது. பொதுச் சமூகம் மறந்துவிட்ட தலித் ஆளுமைகளின் போராட்டங்கள், கல்விப் பணிகள், செயற்பாடுகள் குறித்தும், தலித் மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக காந்தியடிகளின் அரிசன சேவா சங்கம் மதுரைப் பகுதியில் மேற்கொண்ட பணிகளையும், தலித்துகளின் கல்வி வரலாற்றையும் இந்நூல் விரிவாக பேசுகிறது. தலித் வரலாற்றியலில் இந்நூல் முக்கிய ஆவணம். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக இந்நூல் வந்துள்ளது.
ஆசிரியர் பற்றி:
ஸ்டாலின் ராஜாங்கம் (பி. 1980) திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முன்னூர் மங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியர். தமிழ்ச் சமூக வரலாறு, பண்பாடு தொடர்பாகக் கள ஆய்வு செய்தும் எழுதியும் வருபவர். அயோத்திதாசர் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். “அயோத்தி தாசர்: வாழும் பெளத்தம்”, “எழுதாக் கிளவி, “ஆணவக் கொலைகளின் காலம்” உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
தொடர்புக்கு:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58.வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை-600017
கைபேசி எண். 9952952686 (ம) 9790740886