சிந்தனை செய் மனமே
சிலந்திவலைச் சிக்கல்!
சிலந்தியொன்று தன்வலையைச் சிக்கலாக்கிச் சிக்கும்
நிலைபோல மக்களும் வாழ்க்கையை நாளும்
சிலந்திவலைச் சிக்கலாக்கிச் சிக்கித்தான் வாழும்
அவலத்தில் வாழ்கின்றார் காண்.
மதுரை பாபாராஜ்
எல்லாம் ….
பாழும் மனத்தின் வேலை
யான் எனது என்னும் செருக்கின் வேலை
மனத்தில் காமம் வெகுளி மயக்கம் தெளிந்தால்,
உண்மை நிலை தெரியும்
(சொல்லப்போனால்
சிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை)
திருக்குறள்: 360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Explanation:
If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).