திருக்குறள் உவமை நயம்
சி. இராஜேந்திரன்
288 பக்கங்கள் (2007)
விலை ரூபாய் 200/-
இந்த நூலில் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற மூன்று பகுதிகளிலிருந்தும் 238 உவமைகள் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன.
கவிதா பதிப்பகம்,
சென்னை..
8, மாசிலாமணி தெரு
தியாகராய நகர்
சென்னை 17
9677249001,
9677249002
Buy Now:https://www.noolulagam.com/tamil-book/22213/thirukkural-uvamainayam-book-type-tamilmozhi/
வள்ளுவத்தின் 8 ஆவது அதிகாரம். அன்புடைமை
இல்லற இயலில் கணவன், மனைவி குழந்தைகள் என்று மூன்று அங்கத்தினர்கள் குறித்து கூறிய பின், இல்லறத்தில் அடிப்படை குணமான அன்பு பற்றி கூறத் தொடங்குகிறார் வள்ளுவர்
அன்பு தான் இல்லறத்தில் அடித்தளம் என்பதை அன்பும் அறனும் உடைத்தாயின் என்ற குறளில் தெளிவாகக் கூறுகிறார்
அறம் என்பதை இல்லறத்தின் பயன் என்றும்,
அன்பு என்பது இல்லறத்தின் குணமாக இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் குடும்ப வாழ்க்கையின் இயல்பு, நோக்கம் எனற இரண்டையும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு. குறள் 73
உயிருக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு, உயிர் அன்பின்மீது கொண்ட ஆசையால் விளைந்தது எனக் கூறலாம்.
இந்த மனித வாழ்க்கை பெறற்கரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஔவையாரும் ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஒத்துப் போகக்கூடிய ஒன்று ,பரிணாம வளர்ச்சியால் மனிதன் உச்சக்கட்டத்தில் இருக்கிறான் என்பது.
உயிர் தனித்து நின்றால் பயனில்லை. உயிர் அருவமாய் அலைந்து திரிந்தால் பேய் எனப்படுகிறது. உடல் மட்டும் இருந்தால் அது பிணம் எனப்படுகிறது.
உயிரும், உடலும் சேர்ந்து இருந்தால்தான் அது மனிதன் எனப்படுகிறது
உயிரும், மெய்யும் சேர்ந்தால்தான் இயக்கம் பிறக்கிறது ;உயிரும், மெய்யும் சேர்ந்தால்தான் ‘சொல்’ பிறக்கிறது. மொழி உதிக்கிறது.
எப்படி மூச்சு விடுதல் உயிர் வாழ இன்றியமையாததோ ,அதுபோல் அன்பு செலுத்தலும் இந்த மண்ணில் வாழத் தேவையானது.
மூச்சு விடுவதை நிறுத்தினால், உடல் இயக்கத்தை நிறுத்திவிடும், நாம் இறந்து விடுவோம். எப்படி மூச்சு விடுதல் உயிர்வாழ இன்றியமையாததோ அதுபோல் அன்பு செலுத்துவதை நிறுத்தினால், நமது உள்ளம் இறந்து போகும்.
நாம் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளாய், ‘மனிதம்’ நீங்கிய உடல்களாய் வலம் வருவோம்.
‘பிறவியின் பயனே அன்புடைமை’ என்கிறது வள்ளுவம். உயிர் பிறக்காவிட்டால், உடம்போடு இணையா விட்டால், அன்பு செலுத்த முடியாது. எனவேதான் உயிர் உடலோடு இணைகிறது.
பெறுதற்கரிய மனித உருவெடுத்து உயிர் வருவதற்கு காரணமே, மற்ற உயிர்களின்மேல் அன்பு செலுத்துவதற்கு, இந்த மனிதப் பிறவி ஒரு வாய்ப்பளிக்கிறது என்பதால்தான்.
இப்படி உயிரும் அன்பும் ஒன்றோடு ஒன்று நன்கு இணைந்தால் தான் பொருள் பொதிந்த வாழ்க்கை தொடங்குகிறது. இந்த வாழ்க்கையில் அன்பு இணையும் போதுதான் வாழ்க்கை பொருள்பொதிந்த வாழ்க்கையாக மாறுகிறது.
திருக்குறள் உவமை நயம் (2007)
சி இராஜேந்திரன்
நூலிலிருந்து….
288 பக்கங்கள் ரூபாய் 200/-
கவிதா பப்ளிகேஷன்ஸ்
சென்னை
அலைபேசி 7402222787