காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 10.05.2023 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்:
திரு சி.இராஜேந்திரன்
புத்தகம்:
காந்தி வழிக் கதைகள்
தொக்குப்பாசிரியர்:
கே.ஆர்.கல்யாணராமன்
இந்நிகழ்வு காந்தி கல்வி நிலையத்தில் நிகழும். வெளியூர் நண்பர்கள் GoogleMeet வழியே நேரலையில் பங்கேற்க இணைப்பு: https://meet.google.com/qwy-pozz-oei
பேச்சாளர் பற்றி:
இந்த வார பேச்சாளர் திரு சி. இராஜேந்திரன் IRS., அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அமரர் மு. வையாபுரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய வருவாய்ப் பணியில் (IRS- சுங்கம், மத்திய கலால் மற்றும் சேவை வரி) 1985-ஆம் ஆண்டு சேர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூரில் இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய அனுபவம் உடையவர். மத்திய அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், இவருக்கு 2003-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது விருது வழங்கப்பட்டது.
“திருக்குறள் உவமை நயம்” என்ற 238 திருக்குறள் உவமைகளுக்கு விளக்கம் அடங்கிய நூலை 2007-இல் எழுதி வெளியிட்டார். அதுமுதல், பல்வேறு இடங்களுக்கும் சென்று திருக்குறள் சார்ந்த பயிற்சி பட்டறைகளை பல்வேறு தளங்களில் நடத்தி வருகிறார். “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற மூன்று தொகுதிகள் ( 1890 பக்கங்கள் )கொண்ட இவரதுநூல் பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது. வள்ளுவத்தின்பால் ஈர்ப்பும் ஆர்வமும் கொண்டவர்களுக்காக300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட Voice Of Valluvar Family-யை டெலிகிராம் தளத்திலும் www.voiceofvalluvar.org என்ற இணைய தளத்தையும் நண்பர்களோடு சேர்ந்து நடத்தி வருகிறார் . இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிப் பாராட்டியுள்ளன.
இதற்கு முன்னர், புதன் வாசகர் வட்டத்தில் “எல்லாம் செயல் கூடும்: காந்திய ஆளுமைகளின் கதைகள்” “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்”, “வள்ளுவர் வழியில் காந்தியம்” மற்றும் “எப்பிறப்பில் காண்போம் இனி” ஆகிய நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்
நூல் பற்றி:
காந்தியடிகளின் உயிருக்குயிரான சத்தியம், அகிம்சை, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, வகுப்பு ஒற்றுமை, மகளிர் முன்னேற்றம் போன்ற பல தத்துவங்களை உள்ளடக்கியும், மையக் கருத்தாகக் கொண்டு கல்கி, ராஜாஜி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, ரா.கி.ரங்கராஜன், அகிலன், பி.எஸ்.ராமையா என அன்றைய 50 தமிழ் எழுத்தாளர்களின் 50 சிறுகதைகளை “மகரம்” கே.ஆர்.கல்யாணராமன் அவர்கள் தொகுக்க, அவருடைய நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காந்தி நினைவு நிதி வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை – 600017
9790740886 (ம) 9952952686