- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-11 05/05/2023
May 5, 2023 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-11
நாள்: 05/05/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: திருக்குறள் கெத்ய சங்கிரகம்
நூலாசிரியர்: எ காமாட்சி குட்டியம்மா
‘திருக்குறள் கெத்ய சங்கிரகம்’ என்னும் மலையாள மொழியில் எழுதப்பட்ட இந்நூல், திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளின் சுருக்கமாக அமைகிறது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஆசிரியர் காமாட்சி குட்டியம்மா, தனக்குப் பிடித்த ஒரு குறளைத் தந்து அவ்வதிகாரத்தின் பொருளை மலையாள கலாச்சாரப் பண்பாட்டோடு விளக்கிக் கூறுவதாக இந்நூல் அமைகிறது. இன்பத்துப்பால் குறித்த செய்திகள் இல்லை. இந்நூலை 2010ஆம் ஆண்டு, கேரள சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.
நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி
கேரளப் பல்கலைக்கழகத்தில், தமிழ் முதுகலை படித்து, அப்பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்டமும் பெற்ற இவர், பிறகு அங்கேயே உதவிப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பும் பெற்றார். சிலகாலம் அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். “வீர சோழிய நேமிநாதம்: ஓர் ஒப்பாய்வு” என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வேடாகும். இவர் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லமை பெற்றவர். ஒப்பீட்டு நோக்கில் இலக்கண சிந்தனைகள் (2008), தமிழ்-வடமொழி இலக்கண உறவு (2011), சமத்துவ பேராசிரியர் நாச்சிமுத்து (2015) என்பன இவரது நூல்களில் சிலவாம். சேரசெந்தமிழ் இலக்கியம் (இரண்டு தொகுதிகள்-2019) மற்றும் பெண் தெய்வங்கள் (மூன்று தொகுதிகள்-2021) ஆகியன இவர் பதிப்பித்த நூல்களாகும். 2017ம் ஆண்டு சிறந்த ஆய்வு கட்டுரைக்கான ‘பாரதி தமிழ் செம்மல் விருது’ மற்றும் கவியரசு கண்ணதாசன் ‘ஆய்வுச் செம்மல் விருது’ என்பன இவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org
Karka Kasadara
9445543442
trust@karka.in