Skip to content

ஒரூஉ முரண்

ஒரூஉ முரண்

எதிரெதிர் சொற்கள் ஒரே குறளில் பயின்று வருவது முரண் எனப்படும்.

முரண்களில் பல வகை உண்டு .இங்கே நாம் பார்க்க இருப்பது ஒரூஉ முரண்
குறளில் 7 சீர்கள் உள்ளன.

முதற்சீரும் நான்காம் சீரும்
முரணாக அமைவது ஒரூஉ
முரணாகும்.

59, 121, 240, 298, 319, 409, 427,
430, 460, 496, 616, 643, 708, 826
835, 973, 976, 979, 1048, 1083,
1124, மேலும் 1218.

59)…புகழ்….இகழ்

121)…அடக்கம்…அடங்காமை

240)…வசை…இசை

298)…புறம்…அகம்

319)…பிறர்க்கு…தமக்கு

409)…மேற்…கீழ்

427)…அறிவுடையார்…அறிவிலார்

430)…அறிவுடையார்…அறிவிலார்

460)…நல்லினம்…தீயினம்

496)…கடல்ஓடா…கடல்ஓடும்

616)…முயற்சி…முயற்றின்மை

643)…கேட்டார்…கேளாரும்

708)…முகம்நோக்கி…அகம்நோக்கி

826)…நட்டார்…ஒட்டார்

835)…ஒருமை…எழுமை

973)…மேலிருந்தும்…கீழிருந்தும்

976)…சிறியார்…பெரியார்

979)…பெருமை…சிறுமை

1048)…இன்றும்…நெருநலும்

1083)…பண்டறியேன்..இனியறிந்தேன்

1124)…வாழ்தல்…சாதல்

1218)…துஞ்சுங்கால்…விழிக்குங்கால்

இவ்வாறு வள்ளுவர் ஒரூஉ
முரணமைத்து பாடி குறள்
வெண்பாவில் கோலோச்சி
நிற்கிறார்.நாமும் குறள்
வெண்பா இயற்றலாம்.ஆனால்
அவையெல்லாம் வள்ளுவத்தின்
முன் நிற்குமா?.

வாழ்க!……..வளர்க!
தென்காசி கிருஷ்ணன்
29-04-2023.