Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-9 21/04/2023

April 21, 2023 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-9

நாள்: 21/04/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: குறள் கூறும் சட்டநெறி
நூலாசிரியர்: மா சண்முகசுப்ரமணியம்

“அடிப்படை சட்ட நெறிகள் பெரும்பாலும் எல்லா நாட்டிற்கும், எல்லாக் காலத்திற்கும் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. ஒப்புயர்வில்லாத் திருக்குறளிலும் அவ்வொப்புமை காணப்படும் உண்மையினை, இந்நூலால் தெள்ளத் தெளிய இனிதுணரலாம்”. வினைத்தூய்மை, தீயவை செய்யற்க, குற்றங்கடிதல், நடுவுநிலைமை, நெஞ்சத்துக் கோடாமை என்று திருக்குறள் உணர்த்தும் நெறிகளை, சட்டக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றது இந்நூல். 1921ம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் தோன்றி, வழக்கறிஞராக நாடறியப்பட்ட திரு மா.சண்முகசுப்பிரமணியத்தின் மற்ற நூல்களான ‘சட்ட இயல்’ அறிமுக நூலையும், சட்டத் தமிழ் அகராதியையும் சட்ட மாணவர்களும் வழக்கறிஞர்களும் இன்றளவும் பயன்படுத்திவருகின்றனர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

நூல் அறிமுகம் செய்வார்: பேரா மு முத்துவேலு

சென்னையில் லயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். “சட்டத் தமிழ்” என்னும் தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தவர். பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். பல்வேறு சர்வதேச அரங்குகளில் தன்னுடைய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பதிவாளராக பணியாற்றியுள்ளார். பல நூல்களின் ஆசிரியர். தற்போது தமிழக அரசின் அரசாங்க மொழிகளுக்கான குழுவில் பகுதிநேர உறுப்பினராக இருக்கிறார்.

Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org

Karka Kasadara
9445543442
trust@karka.in

Details

Date:
April 21, 2023
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,

Venue

Chennai
Chennai, India