Skip to content

“திருக்குறள் நெறி பரவலாக்கம்”

அனைவருக்கும்
அன்பு நிறை வணக்கம்

அரிய வாய்ப்பு…
திருக்குறளை மேலும்
அறிய ஒரு வாய்ப்பு…

“திருக்குறள் நெறி பரவலாக்கம்”
என்பது ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சி

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற நோக்கில் நாம் கற்ற / பெற்ற அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்

நவில்தொறும் நூல் நயம் என்று இணைய வழித் தொடர் நிகழ்ச்சியை வள்ளுவர் குரல் குடும்பம், கற்ககசடற ,வலைத்தமிழ் என்ற மூன்று அமைப்புகளும் சேர்ந்து நடத்தி வருகின்றது

இந்த நிகழ்ச்சியில் இதுவரை திருக்குறளைச் சார்ந்து எழுந்துள்ள கிட்டத்தட்ட 3000 நூல்களில் எந்த ஒரு நூலைப் பற்றி வேண்டுமானாலும் 40 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை இணைய வழியாக உரை நிகழ்த்தலாம்.500க்கும் மேற்பட்ட குறள் சார்ந்த நூல்கள் பற்றிய அடிப்படை தகவல்கள் www.voiceofvalluvar.org. என்ற இணைய தளத்தில் கிடைக்கும்

குறள் ஆர்வலர்கள் , நீங்கள் எந்த திருக்குறள் நூல் குறித்துப் பேச இருக்கிறீர்கள் என்பதைத் தெரிவித்தால் நல்லது..

திருக்குறள் நூல்கள் குறித்து வேறு யாராவது பேச இருந்தால் அவர்களுக்கும் இதை அன்புகூர்ந்து தெரிவிக்கவும்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் மாலை 6:30-0745 இணைய வழியாக நடக்கும்.

மின்னஞ்சல்
voiceofvalluvar1330@gmail.com

எனக்குத் தனிப்பெட்டியில் செய்தி அனுப்பலாம்

அன்புடன்
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
10/03/2023