பேராசிரியர் அரங்க இராமலிங்கம் ,மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் ,சென்னை பல்கலைக்கழகம் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக எண்பதுகளில் எடுத்துக் கொண்ட தலைப்பு “சங்க இலக்கியத்தில் வேந்தர்”.
மிகச் சிறப்பான ஆய்வு நூல்
இந்த ஆய்வு பாரி நிலையம் பிராட்வே சென்னை வாயிலாக நூலாக வெளிவந்துள்ளது. முதல் பதிப்பு 1987-ல் வந்துள்ளது தற்போதைய பதிப்பு 2018 ல் வந்துள்ளது
பல அரிய தகவல்களைக் கொண்ட நூல்
அந்த நூலில் வரும் ஒரு தகவல்
சங்க காலத்தில் பல மன்னர்களே புலவர்களாக விளங்கி இருக்கிறார்கள் . சங்கஇலக்கியத்தில் 78 மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது . அவர்களில் 28 பேர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள் .அதாவது 36 விழுக்காடு புலவர்கள்
இதில் சேர மன்னர்கள் 30 பேரும் சோழர்கள் 24 பேரும் பாண்டியர்கள் 24 பேரும் அடங்குவர்
சேர மன்னர்கள் 30 பேர்களில் 10 பேர் புலவர்கள்
சோழர்களில் 24 பேரில் 5 பேர் புலவர்கள்
பாண்டியர்களில் 24 பேர்களில் 13 பேர் புலவர்கள்
குறிப்பாக 54% பாண்டிய மன்னர்கள் புலவர்களாக விளங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
376 பக்கங்கள்
ரூபாய் 300/-
பாரி நிலையம்
பிராட்வே
சென்னை
Phone 044- 26270795
தொகுப்பு
சி இராஜேந்திரன்
04/02/2023
www.voiceofvalluvar.org