Skip to content

ஒடிசாவின் பூரி கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவர் மணற்சிற்பம்!

*குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் *

Pongal Celebrates and Highlights the importance of Efforts & Labour and is an occasion to express our Gratitude to Nature, Farmers, Fellow human beings and Livestocks.

திருக்குறள்: 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

Translation:
Howe’er they roam, the world must follow still the plougher’s team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.

உழவரைப் போற்றுதும்!
உயிர்களைப் போற்றுதும்!!
இயற்கையைப் போற்றுதும்!!!

பொங்கல்
பழையன கழிந்து,
புதியன புகும் நாள்.

இயற்கையை
புதுநெல்லின் பச்சரிசி,
இனிக்கும் வெல்லம்,
மணக்கும் பசு நெய்,
ஏலக்காய், திராட்சை, முந்திரி
இவற்றோடு பொங்கல் செய்து
படையலிட்டு
வணங்கும் நாள்.

ஐந்தறிவு கால்நடைகளுக்கும்
நன்றியறிதலைத்
தெரிவிக்கும்
நன்னாள்.

ஆறறிவு கொண்ட
மக்களாகிய நாம்
கூடிமகிழ்ந்து,
உழைப்பை,
உழைப்பின் விளைவை,
உழவை, உழவனை
நன்றிப் பெருக்கோடு
கொண்டாடும் இனிய நாள்…

சி. இரா குடும்பத்தினர்
www.voiceofvalluvar.org
15/01/2023.