- This event has passed.
அன்று சாதனைச் சிறுவன் இன்று உதவிப் பேராசிரியர்
September 16, 2021
*முனைவர் திருக்குறள் திருமூலநாதன்,ME PhD*
உதவிப் பேராசிரியர்,
பொருளியல் துறை, ஐஐடி கான்பூர்.
*அன்று சாதனைச் சிறுவன். இன்று ஐஐடி உதவிப்பேராசிரியர்
*பூவாளூர் பூவை பி. தயாபரன் – நாகவல்லி இணையரின் மகன்
இந்திய அறிவியல் கழகம், பெங்களூரில், Game Theory இல் முனைவர் பட்டம் பெற்றவர்.4 வயதிலேயே 1330 திருக்குறளையும் மனனமாக சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர்.சிவபுராணம் அகவலை இரண்டரை வயதுக்குள்ளாகவே மனத்தில் இருத்தியவர். திரும்பத்திரும்ப வீட்டில் ஒலித்ததால் நினைவில் பதிந்தது. வேறு நிகழ்வுகள் நினைவில்லை.
அதைப்போலவே சில நூறு பக்திப் பாடல்கள் 3வயது 3 மாதங்களிலேயே மனப்பாடம் ஆகி விட்டது.அப்போதுதான் தாய் தந்தையரின் வழி காட்டுதலில் 30 அதிகாரம் மனப்பாடம் ஆகிவிட்டது.எழுதப்படிக்கவும் கற்றுக் கொண்டார்.. 4 வயது 2 மாதங்களுக்குள்ளாக 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து விட்டார். அடுத்த 2 வருடங்களில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது..
3 வயதிலிருந்து 8 வயதுக்குள்ளாகவே 400 திருக்குறள் கவனக நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.அதிகாரம் அதிகாரமாக மனப்பாடம் செய்தார். Photographic memory உண்டு. குறள்களின் வைப்பு முறை, அதிகாரம் வைப்பு முறையை மனத்தில் கொண்டு கூறிவிடுவார்.பிறகு பொருள் புரிந்து படிக்க ஆரம்பித்தார். இளமையில் குறள் மனனம். பிறகு காலம் செல்லச் செல்ல, ஒரு மலர் மலர்ந்து மணம் வீசுவது போல குறளறம் உணர்வாக மாறி செயலாக பரிணமிக்கும் ..
நினைவில் நிற்கும் திருக்குறள் அசைபோட்டு, அசைபோட்டு உணர்வாக தன்மயமாகிவிடும் சச்சிதானந்த சுவாமி ஜோதி நிகேதன் உறைவிடப் பள்ளியில் திருக்குறளால், கட்டணம் செலுத்தாமல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தமிழில் ஏற்கனவே ஆழமான அறிவு இருந்ததால் தந்தையார் தொலைநோக்குப் பார்வையுடன் ஆங்கிலம் பயிற்றுமொழியாகத் தேர்ந்தெடுத்தார்..கற்பித்தலில் கற்றலும் நிகழ்கிறது.