கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. ( குறள் – 571)
What truly moves this world
Is that ravishing beauty called Compassion.
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
—மு. வரதராசன்
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது (௫௱௭௰௧)
—மு. கருணாநி
அடிப்படையான மனிதநேயம் மனிதர்களிடம் பலமுறை இல்லாமல் போகிறது
ஆனால் அவ்வப்போது
வனத்தில் சில அரிய நிகழ்வுகள் நடப்பதுண்டு …
அதில் ஒரு நிகழ்வுதான்
இந்த நிகழ்வு .
அதைச்
சொல்லில் வடித்தவர் மாணிக்கவாசகப் பெருமான்
கல்லில்வடித்தசிற்பி பெயர் தெரியாது
இயற்கையின் ரகசியத்தை யார் அறிவார்
👆🏼
திருவாசகம்.
போற்றித் திரு அகவல்.
சிவபெருமானைப் போற்றி போற்றி எனப் பாடிக்கொண்டே வரும் மாணிக்கவாசகர்..
207 ஆவது பாடலில்..
“புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி”
என்கிறார்…
அதாவது..
புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே, போற்றி – என்கிறார்..
இது என்ன வியப்பு..
புலி ஏன் மானுக்குப் பால்தரவேண்டும்.?
பெரும்பற்றபுலியூர்
புராணத்தில் ஓர் உருக்கமான கதை.
முன்னொரு காலத்தில் பாண்டி நாட்டில் ஒரு காட்டில் வாழ்ந்து வந்த பெண் மான் ஒன்று, தன் குட்டியை ஒரு புதரில் மறைத்து வைத்து நீர் பருகச் சென்றது. அப்பொழுது ஒரு வேடன் அதை ஓர் அம்பால் எய்து வீழ்த்தினான். அது தன் குட்டியை நினைந்து உயிர்விட்டது. பசியோடு இருக்கும் தன்குட்டிக்கு யார் பால் தருவது என்று நினைத்தவாறே இறந்துபோனது.
மரத்தை வைத்தவன்தான்
தண்ணீர் ஊற்றவேண்டும்.
படைத்தவனேதான் பசியோடு இருக்கும் மான்குட்டியின் பசிதீர்க்க
வேண்டும்.
தாயை இழந்த குட்டிக்கு இறைவனருளால் அக்காட்டிலிருந்த ஒரு பெண் புலி, பால் கொடுத்து வளர்த்தது. (பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற்புராணம்)
இக்காட்சி..
அரிய சிற்பமாக திருப்பரங்குன்றம் கோவில் தூணில் உள்ளது.
சிற்பத்தின் (சிவபெருமானின்)
இடது கையில் புலி.
வலது கையிலே மான்குட்டி.
மானுக்கு புலி பால் தருகிறது.
படைத்தவனின் கடமையாற்றிய பரமன்.
நம் கடமையை நாம் ஆற்றுவது எப்போது…..
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.( குறள்- 981)
‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்
—புலியூர்க் கேசிகன்
தொகுப்பு
சி. இரா
www.voiceofvalluvar.org
27/12/2022