Skip to content

உயிர்ப்பன்மையத்தைக் காப்பதற்கான உடன்படிக்கை; இயற்கை பாதுகாப்பில் ஒரு மைல்கல்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. ( குறள் – 322)

இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
— சாலமன் பாப்பையா

The chief of all codes ever written
Is to share what you have and protect all life.

We need to make use of the wisdom/ hidden message contained in the literature

A society makes continuous progress only when we dug out the past, take the best, discard the regressive ideas and build the future.

Sangam Literature …it is a record of how our ancestors lived a Life close to the nature..

There is no conflict of human & wildlife.. But understanding the Nature and behaving appropriately..

The Animals cannot change their behaviour but We as human species can….

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறுகிறார்

காலநிலை உச்சி மாநாடுகளும் அதன் முடிவுகளையும் பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த உயிர்ப்பன்மைத்துவ மாநாட்டிற்கு அதே அளவிலான வெளிச்சம் கிடைக்கவில்லை. பொதுவாகவே நம் சிந்தனை அனைத்தும் மனிதமையமாக இருப்பதால் ஏற்பட்ட விளைவுதான் இது. இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என்பதையும் எல்லா உயிர்களும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்ந்து வருகின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் மனிதர்கள் மீது உண்டாக்கும் பாதிப்புகளைவிட பிற உயிரினங்களின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நம் ஒட்டுமொத்த சிந்தனையை மாற்றி அனைத்து உயிர்களுக்குமான செழிப்பான உலகமாக நம் புவியை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க, “இயற்கையுடனான இந்த அமைதி உடன்படிக்கை” ஒரு துவக்கமாக இருக்கட்டும்.

உயிர்ப்பன்மையத்தைக் காப்பதற்கான உடன்படிக்கை; இயற்கை பாதுகாப்பில் ஒரு மைல்கல்.