இன்று அவரது பிறந்தநாள்…
அவரும் அன்றைய பள்ளி கல்லூரிக் கல்வி இயக்குநரும்(நெது சுந்தரவடிவேலு) இணைந்து கல்வித்துறையில் செய்த புரட்சியைதமிழகம் மறக்கவே கூடாது
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல் குறள் எண்: 110 )
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.மு. வ
தமிழின உய்வுக்கு அவர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ முற்பட வேண்டும். தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் தூய்மை.. அகமும் புறமும் ஒன்றே அது வெண்மை.. மனத்துக்கண் மாசிலன். . உளதாகும் சாக்காடு கற்ற வித்தகர். நெஞ்சில் நிறைந்தவர்..
அவரைப்பற்றி ஒரு செய்தி…
மீண்டும் மீண்டும் சிந்தனை செய்ய வேண்டிய செய்தி
இப்படியும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்..
🙏😊அது ஒரு கனாக்காலம் 😊🙏
ஒரு கல்வி ( பள்ளி, கல்லூரி ) இயக்குனரின் உருவப்படத்தை, ஒரு கல்லூரியில் அவர் வாழ்நாளிலேயே, அதுவும் அவர் அந்தப் பணியில் இருக்கும்போதே, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் திறந்து வைத்தார்…
இதை நம்பமுடிகிறதா….
இந்த யுகத்தில் இது நடக்குமா….
நடந்ததே…..
இது நடந்தது தமிழகத்தில்…
நெ. து. சுந்தரவடிவேலு அவர்களின் உருவப்படத்தை அன்றைய முதல்வர் காமராஜர் வடசென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை சர் தியாகராயர் கல்லூரியில், திறந்து வைத்தார்..சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்..
இந்த செய்தியை காமராஜர் நெ. து. சுந்தர வடிவேலுவிடம் கூட கூறவில்லை . ஆனால் இதைப் பற்றி கேள்விப்பட்ட நெ. து. சுந்தரவடிவேலு வேண்டாம் என்று மறுத்து கூறியுள்ளார். ஆனால் காமராஜர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். நீங்கள் உழைப்பால் உயர்ந்துள்ளீர்கள். அடிமட்டத்தில் பிறந்த ஒருவர் கடின உழைப்பால், தனது அறிவால், திறமையால், எவ்வளவு முன்னேற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. எனவே, உங்களது படத்தை திறந்து வைத்தால் மாணவர்களுக்கு அது ஒரு உந்துசக்தியாக அமையும் என்று கூறிவிட்டார்…
மண்ணின் மைந்தர்கள் ஆற்றிய தந்நலமற்ற சேவை, இன்றைய இளைய தலைமுறையினர் அறிய வேண்டும்…. கொண்டு போய் சேர்ப்பது நமது கடப்பாடு
124 பக்கங்கள்.. ரூ 50.. சாகித்ய அகாதெமி வெளியீடு…
இந்த நூலில் சில பகுதிகள் படிக்கும் போது, விழிகளில் நீர்…நன்றியறிதலின் வெளிப்பாடு.. 🙏🏼
நெ. து. சுந்தரவடிவேலு (பக்கம் 32, 33.) . இந்திய இலக்கிய சிற்பிகள்..தமிழ்.. சாகித்ய அகாதெமி. வெளியீடு