வழக்கறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன் (1921)
1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார். சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் ஆனார். 1949 முதல் 1955 வரை மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மாவட்ட முன்சீப்பாக 7 ஆண்டுகள் பதவியில் இருந்தார். சட்டப்பேரவை துறையில் உதவிச் செயலாளராகப் பணிபுரிந்தார். சட்டத்துறை ஆட்சிமொழி ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றினார். சட்டவியல், குற்றவியல், தீங்கியல் எனச் சட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் சொர்ணாம்பாள் அறக்கட்டளையில் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். குறள் கூறும் சட்டநெறி என்ற இவரது நூல் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறிந்த நூலாகும்.