Skip to content

“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் “

“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் ”

நான் பல மேடைகளில் ,
சில திருமண நிகழ்வுகளில் இதைக் கூறுவதுண்டு.

ஐந்தறிவு கொண்ட  வண்டி மாடுகள்

வண்டி மாடுகளுக்குத் தெரியும் ….
ஒன்றை ஒன்று அனுசரித்து செல்ல வேண்டும்

இரண்டுக்கும் யாரும் பாடம் எடுப்பதில்லை
அறிவுரை கூறுவதில்லை

அவை எந்த புத்தகங்களையும் படிப்பதில்லை .

குறிப்பாக எந்த வாட்ஸ் அப் குழுவிலும் அவை உறுப்பினர்கள் இல்லை…
பவர் பாயிண்ட் presentation  கிடையாது.
Zoom meeting..A Big NO

அவற்றின் உள்ளுணர்வு  உரைக்கிறது

இரண்டும் வண்டியை முன்னோக்கி செம்மையாகச் செலுத்த வேண்டும் … ஒன்றை ஒன்று முந்த முயற்சி செய்யாது.

ஒரு மாடு மெதுவாக நடந்தால்
வேகமாகச்செல்லும் மாடு

சற்று தான் வேகத்தை குறைத்து ,
மற்ற மாட்டுக்கு ஈடு கொடுக்கும்

இல்லை என்றால் வண்டி நகராது…
நின்ற இடத்திலேயே வண்டி சுற்றி வரும். இல்லையெனில்
வண்டி கவிழ்ந்துவிடும்
பாரம் ஊர் போய்ச் சேராது .

நாம் மனிதர்கள்
ஆறறிவு கொண்ட மாமனிதர்கள்

மனிதர்கள் என்று கூறிக் கொள்கிறோம்… மாமனிதர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம்

ஆனால் உண்மையாக நாம் வாழ்க்கையை செம்மையாக செலுத்துகிறோமோ

பெரிய கேள்விக்குறி

ஐந்தறிவு கொண்டவண்டி மாடுகளைப் போல
ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து
ஒருவரை ஒருவர் அனுசரித்து ….

எவ்வளவு ஆணவம்
எவ்வளவு தன் முனைப்பு
எவ்வளவு சுயநலம்

ஐந்தறிவு மாட்டுக்கா மனிதர்களுக்கா?
இல்லை மனிதர்கள்
விலங்கினும் கீழானவர்களா??

கணவன் மனைவி என்ற வாழ்விணையர்உறவு
எப்படி இருக்க வேண்டும் ….?

வள்ளுவரைக் கேட்போமா….
நாளை ….