Skip to content

முனைவர் ஜாகிர் ஹுசைன்

முனைவர் ஜாகிர் ஹுசைன் (25.05.1971)

திருமதி. எஸ். சுலைஹா பீவி, திரு.எம்.அகமது இணையரின் மகனாக 25.05.1971 ஆம் நாளன்று குமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தார். இளங்கலைப் பட்டமும் அரபு இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஊடகத்துறையில் பயிற்சியும் பெற்றவர். இஸ்லாமிய இறையியல் கல்விபாகவிஎட்டு ஆண்டுகள் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுமொழிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் அரபுமொழி பாடத்திட்டக் குழு தலைவராக விளங்குகிறார். தமிழக அரசு சார்பில் திருக்குறளையும் (2013) ஆத்திச்சூடியையும் (2015) அரபுமொழியில் மொழி பெயர்த்தவர். 2021ஆம் ஆண்டு திருக்குறள் மரபு இசை குரலாகக் குறுந்தகடு தயாரித்து வழங்குவதில் உறுதுணையாக இருந்தவர். கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 வரை சவுதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச அரபுக் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபு கவிஞர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

சவுதி அரேபியாவில் அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கியம் திருக்குறள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர துபாய் உட்பட ஆறு நாடுகளில் அரபு மொழியில் திருக்குறளை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். அரபு மொழியில் இருந்து ஐந்து நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 21 நூல்கள் மற்றும் 37 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

2019 ஜனவரி 30 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் விழாவில் தொடர்ந்து ஐந்தரை மணிநேரம் தமிழிலும் அரபு மொழியிலும் இசையுடன் திருக்குறளை அரங்கேற்றி உலக சாதனை படைத்தார். இவரது ஒருங்கிணைப்பில் 3 சர்வதேச கருத்தரங்குகளும் 10 தேசிய கருத்தரங்குகளும் நடைபெற்றுள்ளன. குவைத் பொங்குத் தமிழ் மன்றத்தின்குறட் தூதர்’ (நவம்பர் 2019), மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின்குறள் செல்வன்’ (ஜனவரி 2019) உட்பட 9 விருதுகள் பெற்றுள்ளார். அரபு சிறுகதைகளை கிறுக்கி என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். பிப்ரவரி 2022 இல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியிடப்பட்டது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995