Skip to content

மயிலை சீனி. வேங்கடசாமி

மயிலை சீனி. வேங்கடசாமி (16.12.1900 – 08.07.1980)

சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர்திருக்குறள் காமத்துப்பால் நாட்கள்திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகாவித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்றுச் சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார்பிராமிகிரந்தம்தமிழ் என அனைத்து எழுத்துமுறைக் கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார்கன்னடம்மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்துசமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமயக் கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கிறித்தவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், உணவுநூல், துளு நாட்டு வரலாறு, சமயங்கள் வளர்த்த தமிழ், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழ் வாணிகம் முதலான சிறந்த நூல்களின் ஆசிரியர். 25 நூல்களுக்கும்மேல் எழுதியவர். 300 கட்டுரைகளை எழுதிய தமிழ், வரலாற்று ஆய்வாளர்.

தேவாரத்தில் திருக்குறள், திருக்குறளில் பௌத்தமும் சமணமும், ஒரு குறளுக்கு பௌத்த விரிவுரை முதலான இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கன. 2000ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி. வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995