மகாகவி பாரதியார் (11.12.1882 – 11.09.1921)
மகாகவி எட்டையபுரத்தில் பிறந்து புதுவையில் சிறந்து சென்னையில் மறைந்தவர். இப்பெரும் கவிஞரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஏடு பத்தாது. ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்று 39 ஆண்டுகளே வாழ்ந்து பெரும் சாதனை புரிந்தவர். கலைமகள் இவர் ‘நா’வில் குடி கொண்டதால் இவரின் 11 ஆவது வயதில் இவர் பாரதி பட்டம் பெற்றார். இம்மகாகவியைப் பற்றி நூற்றுக்கணக்கான அறிஞர்கள் பாராட்டி போற்றியுள்ளனர். அவற்றை எடுத்துச் சொல்ல 100 பக்கங்கள் ஆகும்.
‘தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அய்யனார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறு என்பதை எடுத்துரைக் கின்றேன்’
என மிக விரிவாகப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகாகவியின் புகழை எடுத்துரைக்கின்றார். இனிமேல் என்ன சொல்ல. . .