Skip to content

பேராசிரியர் D.I. ஜேசுதாஸ்

பேராசிரியர் D.I. ஜேசுதாஸ்

பேராசிரியர் D.I. ஜேசுதாஸ் அவர்களைப் பற்றிய வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. தமிழுக்குப் பங்களித்தவர்களாக ஏசுதாஸ் என்ற பெயரில் மூன்று பேராசிரியர்களின் பெயர்கள் கிடைக்கின்றது. ஒருவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் பணியாற்றிய முனைவர் ..ஏசுதாஸ் அவர்கள். இரண்டாமவர்  பேராசிரியர் செ. ஜேசுதாஸ் அவர்கள். இவர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் தமிழ் இலக்கிய வரலாற்றினை (History of Tamil Literature) விரிவாக எழுதியவர். இவரது வாழ்க்கைத் துணைவியாருடன் (Hephzibah Jesudasan) இணைந்து தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதியதாக அறியமுடிகிறது. திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள் தமிழில் நாவல்களையும் குழந்தைகளுக்கான நூல்களையும் எழுதியதாக அறிய முடிகிறது.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள திருக்குறளில் அரசியல் தத்துவக் கருத்துகள் (The Political Philosophy of Thirukkural) என்னும் கட்டுரை எழுதியவர் பேராசிரியர் D.I. ஜேசுதாசன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் பணியாற்றியதாக அறியமுடிகிறது. இவரது இக்கட்டுரை முதன்முதலில் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற இதழில் வெளிவந்தது. அடுத்துப் பேராசிரியர் டாக்டர் ..மணவாளன் அவர்கள் தொகுத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலிலும் (Essays and Tributes on Tirukkural – 1886 – 1986) வெளிவந்துள்ளது. இவ்விரண்டு இடங்களிலும் கட்டுரையாசிரியரைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லை. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தத்துவத்துறையில் 1953 இல் பணியாற்றியதாக அறியமுடிகிறது. வேறு குறிப்புகள் கிடைக்கவில்லை. இவரைப் பற்றி அறிந்தவர்கள் தொகுப்பாசிரியருக்குத் தகவல் அளித்தால் அடுத்தப் பதிப்பில் இணைத்துக்கொள்ளலாம்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995