Skip to content

பேராசிரியர் டாக்டர் கு. மோகனராசு

பேராசிரியர் டாக்டர் கு. மோகனராசு (12.08.1947)

திரு. குப்புசாமி திருமதி தேசம்மாள் இணையரின் மகனாக 12.08.1947 ஆம் நாளன்று சென்னை இராயபுரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மையத்தில் 35 ஆண்டுகள் பணி செய்தவர். 70 ஆய்வாளர்களுக்கு ஆய்வு நெறியாளராக வழிகாட்டியுள்ளார்.

உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனர். வள்ளுவர் கோட்டம் திருக்குறள் உயராய்வு அரங்கப் பொறுப்பாளராக 20 ஆண்டுகளாக இருப்பவர். 1000 ஆய்வரங்குகள் நடத்தியவர். அதன்வழி 700 நூல்கள் வெளியாகியுள்ளன. 250 நூல்களை எழுதி அவற்றுள் 200 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்கள் இரண்டு உள்ளன.

திருக்குறள் ஞானபீட விருது, தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (ரூபாய் 10 இலட்சம்) உட்பட 50 விருதுகளுக்கும் மேல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. திருக்குறளில் ஆயிரம் புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் இவர். சிந்தனைகளைக் கோட்பாடுகளாக்கும் புத்தாய்வு தந்தை. குறள்ஞானியின் குறள் யாப்பு அளவுகோல் எனும் புதிய கண்டுபிடிப்பாளர்.

தமிழகத்தில் 119 கிராமங்களில் திருக்குறள் கருத்து விளக்கப் புனிதப் பயணங்களை மேற்கொண்டு அவற்றைத் திருக்குறள் திருத்தலங்கள் ஆக்கியவர். தன் சொந்த செலவில் பெரிய திருக்குறள் நூலகம் அமைத்தவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995