Skip to content

பேராசிரியர் சோ.ந.கந்தசாமி

பேராசிரியர் சோ..கந்தசாமி (15.12.1936)

பேராசிரியர் சோ. . கந்தசாமி அவர்கள் 15-12-1936இல் திருச்சி மாவட்ட உடையார்பாளைய வட்டம் இலையூர் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். இவர் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளாதாரம்) (1958) பயின்றார். எம்.லிட் (1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம்வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர். இவர் அறிஞர் .சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் (197985), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர். 28-8-85 முதல் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் இலக்கியத் துறைத்தலைவராக விளங்கியவர்.

பேராசிரியர் சோ. . கந்தசாமி அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை மணந்தார். இவருக்கு மக்கட்செல்வங்களாக, ஆண்மகன் ஒருவரும், பெண்மக்கள் நால்வரும் உள்ளனர்.

இவர் எம். லிட். ஆய்வை Paripadal Lingiustic Study என்ற தலைப்பிலும் பிஎச்.டி. ஆய்வை Buddism as expounded in Manimehalai எனும் தலைப்பிலும் செய்தவர். மொழியியலிலும் வடமொழியிலும் முதல் வகுப்பில் பட்டயம் பெற்றவர். தத்துவம், இலக்கணம், சங்க இலக்கியம் மூன்றிலும் முன்னவர். சிந்தாத்தம் தமிழ் பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். ஆழக்கற்றவர். அகலப் படித்தவர்.

சைவம் தந்தவை, தமிழும் தத்துவமும் (வடமொழி பாலி பிராகிருத நூல்களின் தகவல்கள் கொண்டு உயர் தமிழ் இலக்கியங்களில் காணலாகும் இந்தியத் தத்துவத்தின் ஒத்த உறழ் முறைகளை ஆராய்வது) திருக்குறள் கூறும் உறுதிப்பொருள் (77இல் தமிழக அரசின் முதற்பரிசு). மணிமேகலையில் பௌத்தம், தமிழ் இலக்கியத்தில் பௌத்தம், பௌத்த சமய நூல்கள், மணிமேகலையின் காலம், பரிபாடலின் காலம், இலக்கியப் சோலையிலே, புரட்சிக்காப்பியம், தொல்காப்பியத் தெளிவு, தெய்வச் சிலையார் உரைத்திறம், குறுந்தொகை திறனாய்வு, காப்பியக் குறிக்கோள், சுந்தரர் செந்தமிழ், The Age of Tolkappiyam, An introduction to Saiva Siddhanta, முதலான நூல்களைப் படைத்தவர்.

திருக்குறளுக்கு இவர் எழுதிய உரை நான்கு பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ளது. குறுந்தொகைப் பாடல்களைக் கூற்று அடிப்படையில் பிரித்து உரை எழுதி பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தும் தமிழிலும் அரிய கட்டுரைகள் பல ஆக்கிவருகிறார். 1973 முதல்இந்துஇதழில் மதிப்புரை செய்துவருகிறார். இற்றை நாளில், விரல்விட்டு எண்ணத்தக்க தமிழ்ப் புலமையாளருள் ஒருவர்.

அறிஞர் சோ..கந்தசாமி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிந்துள்ளார். இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர். இவர் 2013-2014ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர்.

அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள இவர்செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995