பேராசிரியர் க.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (03.04.1963)
பேராசிரியர் க.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள் திரு.ஆறுமுக நாயகர், திருமதி ராஜரத்தினம் இணையருக்குப் புதுச்சேரியில் 03.04.1963 இல் பிறந்தவர். புதுச்சேரியிலுள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளியிலும் தாகூர் அரசுக் கலைக் கல்லூரியிலும் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்திலும் படித்துப் பட்டம் பெற்றவர்.
தற்பொழுது புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியராக, பிரெஞ்சுத்துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டு வருகிறவர். மும்பை SPARROW அமைப்பின் இலக்கிய விருது (2020), பிரெஞ்சு அரசின் ரோமன் ரோலண்ட் மொழியாக்க விருது (2021) ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். மொழியாக்க நூல்கள் உட்பட 14 நூல்களை எழுதியுள்ளார். மொழியாக்கத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறார்.