Skip to content

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

பேராசிரியர் .சுந்தரமூர்த்தி (31.07.1941)

    கோயம்புத்தூர் மாவட்டம் இளையபெருமாள், பழனியம்மாள் இணையருக்கு மகனாக வெள்ளலூரில் 30.07.1941 இல் பிறந்தவர். பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு.. அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் (1969) திருக்குறள் இருக்கையில் பணியாற்றியவர்திருக்குறள் அணி நலம் (1971)  கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள் (1979)  தமிழாய்வு தொகுதி – 10 (1981) நூல்களைச்  சென்னைப்  பல்கலைக்கழக வெளியீடாக  வெளியிட்டார்பேராசிரியர் டாக்டர் M.A. துரை அரங்கனார் ஆங்கில ஆய்வேடு  (Philosophy and Religion of Sundarar Thevaram)  இரு புராண விருத்தம் (1985).  அல்லி கதை (1985).  திவாகரம் தொகுதி I & II (1990, 1993) ஆகிய நூல்களைப்  பல்கலைக்கழக வெளியீடாகப் பதிப்பித்தார்.  

சென்னைப் பல்கலைக்கழகத்  தமிழ் மொழி இலக்கியத் துறைகளின் தலைவராகவும்  பதிப்புத்துறை இயக்குநராகவும் சிறக்கப் பணியாற்றினார்தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 19.12.2001 முதல் 18.12.2004 வரை  பணியாற்றினார். செம்மொழி நிறுவனத்தில் 2008  முதல் 2014 வரை  முதுநிலை ஆராய்ச்சி இருந்தார். இந்நிறுவனத்தின் துணைத்தலைவராக 23.09.2021 அன்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.  10 லட்சம் ரூபாய் பரிசோடு செம்மொழி கலைஞர் விருது இவருக்கு அக்டோபர் 2021 இல் கிடைத்தது. தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உட்பட 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். ஜெர்மனிஇலங்கைமலேசியா ஆகிய அயல்நாடுகளுக்குச்  சென்று தமிழை வளர்த்தவர். அமெரிக்கா சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் (04.07.2019 – 07.07.2019) கலந்து கொண்டவர்

பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன் என்ற பொருளில் (1977) முனைவர் பட்டம் பெற்றார்இந்த ஆய்வேடு நூலாகவும் வெளிவந்துள்ளதுசொல்வலை வேட்டுவர், வள்ளுவர், நடையியல், பாரதி நடையியல்திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலைஇலக்கியச் சுடர்திருக்குறள் சில அரிய பதிப்புகள் என  50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சுவடியியல்நடையியல்அகராதியியல்மொழிபெயர்ப்பியல்ஆய்வியல் என  அனைத்துத் துறைகளிலும் தம் பங்களிப்பை அளித்த சான்றோர். 10-04-2022 ஞாயிறன்று நானும் பேராசிரியரும் புலவர் என்.. இராமலிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். 1976 தொடங்கி பேராசிரியருடனான தொடர்பு இன்றுவரை தொடர்கிறது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995