Skip to content

பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்

பேராசிரியர் .மு.பரமசிவானந்தம் (05.07.1914 – 15.08.2001)

பேராசிரியர் .மு.பரமசிவானந்தம் அவர்கள் செங்கல்பட்டு அங்கம்பாக்கத்தில் பிறந்தவர். ஆந்திரா உசுமானிய பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றியவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை, தமிழ் முதுகலை படித்தபோது எனக்குப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். 1975 இல் பணி நிறைவு பெற்றவர்.

கவிதை உள்ளம் (கவிதை), கறை படிந்த உள்ளம் (சிறுகதை), துன்பச் சூழல் (புதினம்), சாதிவெறி, வழுவிலா மாணிக்கவாசகர் (நாடகம்), கவிதையும் வாழ்க்கையும், தமிழக வரலாறு, சமுதாயமும் பண்பாடும், தமிழ் உரைநடை வளர்ச்சி, வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி, தமிழர் வாழ்வு, 19 ஆம் நூற்றாண்டு உரைநடை வளர்ச்சி என 69 நூல்களை எழுதியவர்.

இவரது வாழ்க்கைத் துணைவியார் வள்ளியம்மை பெயரில் கல்வி நிலையங்களைத் தொடங்கியவர். இந்நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக சென்னை, அண்ணாநகரில் இயங்கி வருகின்றன. தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகு புலமை பெற்றவர். மாணவர்களிடம் அன்பொழுக, ‘என்னம்மா கண்ணுஎன உரிமையோடு பழகுபவர். அவரிடம் பயின்ற நாட்கள் இனிமையானவை, மகிழ்ச்சியானவை.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995