Skip to content

புலவர் இளங்குமரனார்

புலவர் இளங்குமரனார் (30.01.1930 – 25.07.2021)

திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள் புரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். படிக்கராமர், வாழவந்தம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். 1946இல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1957 இல் புலவர் பட்டம் பெற்றார். கழகப் புலவர் குழுவில் ஒருவராக இருந்து எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார்

தொல்காப்பியம்திருக்குறள் தொடர்பான இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கனஉரையாசிரியர்களால்  மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்றிருந்த காக்கைபாடினியம் இலக்கண நூலின் செய்யுள்களை ஒருங்கு திரட்டி அந்நூலை மீட்டுருவாக்கம் செய்தார்தகடூர் யாத்திரை நூலினைப் பதிப்பித்தார்பாவாணர்  பற்றாளர். தனித்தமிழ் போற்றுபவர். பாவாணர் எழுத்துகளைத் திரட்டிதேவநேயம்என்ற பெயரில் 13 தொகுதிகளாகக்  கொண்டு வந்தார். பாவாணர் வரலாற்றையும் எழுதினார். தமிழ் இலக்கண நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தார்.  ‘தமிழ் இலக்கண வரலாறுஎனும் நூல் இவரது இலக்கணப் புலமையின் வெளிச்சம்.

செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் 10 தொகுதிகள் இவரது உழைப்பின் உச்சம்தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் பல்வேறு நிலைகளில் ஆய்ந்து உரை எழுதியவர்

நல்லாசிரியர் விருது (1978)  தொடங்கி திருவாவடுதுறை மடம் வழங்கிய திருக்குறள் செம்மல் விருது (2004), தமிழ்த் தலைவர் பழ. நெடுமாறன் வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது (2004), மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ச் செம்மல் விருது (2004), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2012)  என 15க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

 இவரது நூல்கள் முழுமையும் தமிழ் வளம் என்ற பெயரில் 40 தொகுதிகளாக வெளிவந்துள்ளனமதுரை திருநகரில் 25.07.2021 ஞாயிற்றுக்கிழமையன்று இயற்கை எய்தினார். 26.07.2021 திங்கட்கிழமை அன்று அரசு மரியாதையுடன் இவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புலவர்மணிமுதுபெரும் புலவர் எனப் போற்றப் பெற்ற இவரது வாழ்வு தமிழாகவே அமைந்ததுஇவரது நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்டதாக தமிழக அரசு செப்டம்பர் 2021 இல் அறிவித்தது

இலக்கண இலக்கியப் பேரறிவும் பதிப்புத்திறமையும் மிக்கவர். உரையாசிரியராக, சுவடியியல் அறிஞராக, பழந்தமிழ், இலக்கணத்தை மீட்டெடுத்தவராக, எடுத்தவராக, சொற்பொழிவாளராக வாழ்ந்தவராவார். தகுதி மிகுதி படைந்திருந்தும் மிக எளிமையாக வாழ்ந்து அனைவரிடமும் பண்போடு பழகிய தமிழ்ச்சான்றோர் இவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995