பல ஆண்டுகளுக்கு முன் நண்பர் வடலூர் சென்றிருந்தார் .
அங்கே உழைக்கத் தகுதி படைத்தவர்கள் எல்லாம் மூன்று வேளை உணவருந்திவிட்டு வருவோர் போவோரிடம் காசு கேட்கின்றனர்.
இந்த அவலம் இப்போது மட்டுமல்ல எப்போதும் உண்டு.வள்ளலாரின் நோக்கம் நிறைவேறவில்லை…என்று மிகவும் வருத்தப்பட்டார்
உழைக்கும் வலிமை படைத்தவர்கள் பலர் .. வீணே உண்டு உறங்கிக் காலம் கழிக்கின்றனர்..
காலம் காலமாக இருந்து வரும் நிலை..
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (குறள்- 42)
துறவியர்க்கும்,
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
— மு. வரதராசன்
The householder supports the needs of Renunciates, ancestors and the poor.
வடலூர் அருகே, ஆதரவற்றவர்களுக்கு, அரசு முன்னெடுப்பு செய்து, ஆரோவில் போல, மகாத்மா காந்தி ஃபீனிக்ஸ் ஆசிரமம் போல… அரசு உருவாக்கினால் நல்லது.. துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இந்த ஆசிரமம் புகலிடமாக மாறவேண்டும்
அரசு முன்னெடுப்பு செய்து அதை ஆன்மிக, சுற்றுலா தலமாக மாற்றம் செய்ய வேண்டும்..
வடலூர், வள்ளலாருடன் தொடர்பு கொண்ட இடங்கள் அனைத்தும் தியானம் செய்ய ஏற்ற இடமாக, வள்ளலார் நெறி பரப்பும் மையமாக மாற்றம் செய்யப்பட வேண்டும்.
வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு திருஅவதார நாள் கொண்டாடும் இந்த வேளையில், உரியவர்கள் கவனித்து மேல் நடவடிக்கை வேண்டும் என வள்ளுவர் குரல் குடும்பம் கேட்டுக் கொள்கிறது ..