Skip to content

டாக்டர் வா.செ.குழந்தைசாமி

டாக்டர் வா.செ.குழந்தைசாமி (14.07.1929 – 10.12.2016)

கரூரை அடுத்த வாங்கலாம் பாளையம் ஊரினர்சென்னை (கிண்டிஅண்ணா பொறியியல் கல்லூரிப் பேராசிரியர், பொறியியல் கல்வி இயக்குநர்அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்இருமுறை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என சிறந்தவர். இலியானாஸ் பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டமும் (Ph.D) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் (JAFNA) சிறப்பு டாக்டர் (D.Lit) பட்டமும் பெற்றவர். இந்திரா காந்தி தொலைநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பொலிந்தவர்

உலகப் புகழ் நீரியல் நிபுணர்கள் எழுவரில் ஒருவர்தமிழக இந்திய அளவில் பல்வேறு குழுக்களில் இடம்பெற்ற பொறியியல் அறிஞர். அறிவியலாளர், எழுத்தாளர், கவிஞர்பேச்சாளர் எனப்  பன்முகம்  கொண்ட ஆளுமையாளர்.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருதினை (1999) பெற்றவர். தமிழக அரசின் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர். பத்மஸ்ரீ (1992)  பத்மபூஷன் (2002)  ஆகிய ஒன்றிய அரசின் உயரிய விருதுகளைப் பெற்ற தமிழர்இவருடைய கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளனஇவர் எழுதியவாழும் வள்ளுவம்எனும் நூல் சாகித்திய அகாதமி (1988) விருதினைப் பெற்றுள்ளது

இவரைமனிதநேய மாண் கவிஞர்என்றும்அறிவு உணர்வியல் அருள் கவிஞர்என்றும் பாராட்டுகிறார் பேராசிரியர் மது..விமலானந்தம் அவர்கள். அன்னைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகுறப் பேசும் ஆற்றல் மிக்கவர்இவருடைய சொற்பொழிவினைப்  பலமுறை  கேட்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்முத்தமிழோடு நான்காம் தமிழாக  அறிவியல் தமிழ் வளர வேண்டும் என ஓங்கிக் குரல் கொடுத்தவர்இவர் எழுதிய அறிவியல் தமிழ் எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இவரின் முயற்சியால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு அமைப்புகள் உருவாயின. 1. அறிவியல் இலக்கிய கழகம் (Science Literary Society) 2.வளர்தமிழ் மன்றம் (Council of Tamil Development). இவ்விரு அமைப்புகளின்வழி தமிழும் அறிவியல் தமிழும் வளர்ந்தன

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995