Skip to content

டாக்டர் ந.வ. அஷ்ரப் குஞ்ஞனு

டாக்டர் .. அஷ்ரப் குஞ்ஞனு (05.02.1962)

திருமதி. சி. எச். ஆயினா, திரு. என்.வி. அப்துல் ரகுமான் இணையரின் மகனாக 05.02.1962 அன்று திருச்சி காஜா நகரில் பிறந்தவர். ஆங்கிலம், மலையாளம், இந்தி, அரபு ஆகிய மொழிகளில் புலமை உடையவர். பள்ளிப் படிப்பினைக் காஜாமியான் உயர்நிலைப் பள்ளியிலும் இளநிலை விலங்கியல் அறிவியல் பட்டத்தைச் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் மூதறிவியல் பட்டத்தைத் தெஹ்ராதூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்திலும் முடித்தவர்.

கோவை உயிரியல் பூங்காவில் உதவி இயக்குநராகப் பணி அமர்ந்தார். புது தில்லி இந்தய வனவிலங்கு அறக்கட்டளையின் துணைத் தலைவராக அமர்ந்தவர். இந்நாள்வரை அப்பணியில் தொடர்கிறார்.

இலக்கிய சமய ஒப்பாய்வு நூல்கள் இரண்டினைப் படைத்துள்ளார். அவை கட்டுரைகளின் தொகுப்புகள். சமயம் சார்ந்த கட்டுரைகள் ஐந்தினை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

திருக்குறள், சீன இலக்கியங்கள், விவிலியம், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதி இதழ்கள் பலவற்றிலும் அனுப்பியுள்ளார். அவை இதழ்களில் வந்துள்ளன. படங்கள் வரைவதில் ஆர்வம் உடைய இவர் 1330 குறட்பாக்களுக்கும் 133 அதிகாரங்களுக்கும் சுட்டிக்காட்டும்படியான படங்களை வரைந்தவர்.

திருக்குறளை ஆழமாகக் கற்றவர். குறளின் அறக்கருத்துகளைப் பிறமொழி அறக்கருத்துகளோடு ஒப்பிட்டுப் பேசும் ஆற்றல் உடையவர். இதுவரை 24 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகளைத் தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இணையவழியில் திருக்குறளை முன்னெடுக்கும் தமிழ்ப்பணியினைத் தொடர்ந்து செய்துவருகிறார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995