Skip to content

சிந்தனை செய் மனமே-வேள்வியில் உயிர்ப்பலி.

சிந்தனை செய் மனமே

வேள்வியில் உயிர்ப்பலி….

பரிமேலழகரின் காலம் 13 ஆம் நூற்றாண்டு .
அவரது குறள் 328 உரையின்படி அந்தக்காலம் வரை தேவர்களை மகிழ்விக்கவேள்வி/ யாகம் நடத்தி

அதில் உயிர்ப் பலியிட்டு , அதை உண்பது வழக்கமாக இருந்தது என்பதை அறியலாம்

வேள்வியில் உயிர்ப் பலி..
வேள்வி இயற்றுவது ,யாகம் வார்ப்பது
வேதம் ஓதும் பார்ப்பனர்கள்தான்..
புத்தர் காலத்திலிருந்தே…

சோம பானம், சுர பானம்.. இதுவும்
அவர்கள் வாழ்வில் உண்டு

தமிழர் மரபில்
ஊன் சோறு +கள் உண்டு

சங்க இலக்கியம் சான்று

ஆனால் காலங் காலமாக
உயிர்க் கொலைக்கு , மதுவுக்கு
எதிரானது பௌத்தமும் சமணமும்.

எல்லாவற்றிலும் நல்லன எடுத்தல் வள்ளுவர் இயல்பு.பரிமேலழகரே இதைக் கூறுகிறார் .

தமிழர் வாழ்வு மேம்பட
வள்ளுவர் இரண்டையும் கண்டித்தார் ,
இழித்து எழுதினார்

உயிர் நேயம்வளர்க்கச் சொன்னார்
மதி மயக்கும் மதுவை விலக்கச் சொன்னார்

வள்ளுவர் இல்வாழ்வார் வேள்விக்காக உயிர்க்கொலை செய்யலாம் என்று எங்கும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிமேலழகர், வள்ளுவரின் உள்ளத்தைக் காணாத இடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் ,மிகவும் நேர்மையாக, தன் காலத்தில் இருந்த வழக்கத்தைப் பதிவு செய்துள்ளார். வேள்வியில் உயிர்ப் பலியிடுவதையும் ஒருவகையில் நியாயப்படுத்தி உள்ளார்

திருக்குறள்: 328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

பரிமேலழகர் உரை:
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் – தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று “இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்”, (வள்ளுவர் அப்படி எங்குமே கூறவில்லை. அவர் கூறும் ஒரே வேள்வி –சமையல்தான் —விருந்தோம்பல் )

சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை – துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை.

(இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் ‘கடை’ எனப்பட்டது.

துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று.( இது, அன்றைய வழக்கத்தை பரிமேலழகர் நியாயப் படுத்தும் இடம் )

இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம்.

இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.).

உயிர்க்கொலை யார், எதற்கு  செய்தாலும் குற்றமே. இதுவே வள்ளுவர் உள்ளம் .

Explanation:
Not to kill and eat (the flesh of) an animal, is better than
the pouring forth of flesh of killed animals,ghee etc., in thousands of “sacred” fire