Skip to content

ஒல்லும் வகையெல்லாம் ஓவாமல் குறள் வினை

  • by

*திரு பூவை பி. தயாபரன்*
உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் ( பணி நிறைவு )
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை
புள்ளம்பாடி
*ஒல்லும் வகையெல்லாம் ஓவாமல் குறள் வினை*
1. தந்தை வழியில் தனயன்.. தனயன் வழியில், அவரது மகன்.. வழிவழியாக தமிழ் வழியில்

2.பூவாளூர் சைவ சித்தாந்த சபை வழியாக சைவமும் தமிழும் வளர்த்த பெரியவர்கள், நிழலில் தந்தையார் கேள்வி ஞானம் கைவரப் பெற்றவர்

3.அசஞா அப்பா, அசஞா, ஜெகவீரபாண்டியனார், மறைமலை திருநாவுக்கரசு, போன்ற பல அறிஞர்களும் அங்கே வந்து உரையாற்றியுள்ளனர்.

3.எல்லா மாணவர்களையும் முன் எழுத்து உள்பட தம் பெயரை தமிழில் கையொப்பம் இட செய்தவர் .

4 ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனைவியை 1330 குறளையும் மனப்பாடம் செய்து பிறருக்கு எடுத்துச்சொல்லி வழிகாட்டியவர் .

5.குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட குறளை எடுத்துக்காட்டி வழிகாட்டுபவர்.

6. மகன் திருமூலநாதன் எட்டு வயது நிரம்புவதற்குள், 600 முறை மேடையேற்றி பேச செய்த, அவையத்து முந்தி இருக்கச் செய்தவர் .

7. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் நாளில் தவறாது திருக்குறள் விழா எடுத்து, திருக்குறள் மனனம் செய்யும் குழந்தைகளுக்கு தனது குடும்பத்தினரின் வருவாயிலிருந்து பரிசுத் தொகை கொடுத்து குறளைப் பரப்பி வருகிறார்

8. மகன் ,மகள் ,இருவரையும் உயர் படிப்பு படிக்க செய்து முனைவர் பட்டம் பெறச் செய்தவர்

9.ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் தனது சம்பளத்தில், ஓய்வூதியத்திலிருந்து பணம் செலவு செய்து மாணவர்களுக்கு பரிசு கொடுப்பதோடு, பிறரையும் ஊக்குவித்து மாணவர்களுக்கு பரிசு கொடுக்க செய்தார் .

10. *மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற *என்ற குறளை வீட்டின் முகப்பில் எழுதி வைத்து அதன் பொருளையும் வருகிறவர்களுக்கு புரியவைத்து சேவை செய்து கொண்டிருக்கிறார் .