Skip to content

ஒரு அதிசய அரசுப் பள்ளி

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள அரசு பள்ளியில் மொத்தம் 54 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்த 54 மாணவர்களில் 21 பேர் 1330 திருக்குறளையும் சொல்லும் திறமை படைத்தவர்கள்..என்றால் நம்ப முடிகிறதா…

அந்த பள்ளியில் 2 ஆசிரியைகளும் ஒரு பகுதி நேர ஆசிரியையும் பணிபுரிகிறார்கள்.

தலைமை ஆசிரியர் பெயர் திருமதி பிரேமா மற்ற இரண்டு ஆசிரியர்கள் பெயர் கனிமொழி& சங்கீதா.

எப்படியாவது குழந்தைகளை ஒரு நூறு திருக்குறள் சொல்ல வைத்து விட வேண்டும் என்று 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள்..

அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே 850 திருக்குறள் சொல்லும் அளவுக்கு பிள்ளைகளை வளர்த்து விட்டார்கள்
தற்போது 21 பிள்ளைகள் 1330 திருக்குறளையும் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.. இவர்கள் அனைவரும் 10 வயதிற்கு உட்பட்டவர்களே. மேலும் 20 குழந்தைகள் 300 குறள்கள் சொல்லுவார்கள்

இந்த பள்ளி மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊரின் பெயர் இராமநாதபுரம். அருகில் உள்ள கிராமத்தின் பெயர் திருவெள்ளை வாயில்…

இவர்களின் வெற்றிக்குப் பின்புலமாக இருப்பது மீஞ்சூர் இலக்கியப்பேரவை சேர்ந்த திரு ராதாகிருஷ்ணன் திரு சக்கரவர்த்தி முனைவர் கு. மோகனராசு ஆகியோர்..

திரு. சண்முக சுந்தரம் (மாதவரம்) 10 /10/2018 அன்று சென்று பள்ளியைப் பார்த்தார்.. அடுத்த நாள் 11/10/2018 நான் அலைபேசி மூலம் பேசினேன்…

இவர்களது பணியைப் பாராட்டி, திரு. சோம. சண்முக சுந்தரம், பாமரருக்கும் பரிமேலழகர் நூலை, இலங்கை ஜெயராஜ் ஐயா கரங்களால் வழங்கினார்…

திரு சோம. சண்முகசுந்தரம் பெரியவர் 79வயது நிரம்பியவர். குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் .. தற்போது மாதவரத்தில் வசிக்கிறார்.

இவருடைய இரண்டு மகன்கள் யுவராசன்44 வயது குமரகுருபரன் 42வயது , 12 வயது 10 வயது நிரம்பிய போதே 1330 திருக்குறள்களையும் கூறி தவத்திரு குன்றக்குடி அடிகளார் மூலம் 1985 ல் பாராட்டு பெற்றவர்கள். இது
விருத்தாச்சலம் பக்கம் அரசூர் என்ற ஊரில் 1985 இல் நிகழ்ந்த நிகழ்வு. அண்ணனுக்கு தம்பியும் தம்பிக்கு அண்ணனும் ஆசானாக இருந்து திருக்குறள் கற்றிருக்கிறார்கள்..

தற்போது யுவராசனது இரண்டு மகள்களும் காவியச் செல்வி 15 வயது , தமிழ்ச் செல்வி 13 வயது, 1330 திருக்குறளும் மனனம் செய்து தமிழக அரசின் விருது பெறக் காத்திருக்கிறார்கள்

மூன்று தலைமுறையாகத் திருக்குறளை கற்று அதன் வழி வாழ முற்படும் குடும்பம் பெரியவர் சண்முகசுந்தரத்தின் குடும்பம் என்றால் அது மிகையல்ல

மாணவ மாணவியர்களையும், ஆசிரியைகளையும், பெற்றோர்களையும் மற்றும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களையும் பாராட்டுவது நமது கடமை..