இது துரியோதனன் விதுரரை நோக்கிக் கூறியது.. மகாகவி பாரதியார் வைர வரிகள்
எனக்கு மிகவும் பிடித்த மகாபாரதம், பாஞ்சாலி சபதம் மகாகவி பாரதியார் வரிகள்..
கடந்த சில நாட்களாக மனத்தில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் சிலரை நினைத்தால், மனத்தில் அறச் சீற்றம் எழுகிறது ..
சில சமயங்களில் அறத்தை தெளிவாகக் கூற ஒரு கதைத் தேவைப்படுகிறது..
அதைத்தான் மகாகவி பாரதியார், அவருக்கு முன் கவிச்சக்கரவர்த்தி கம்பர், வில்லி புத்தூரார் செய்தனர்..
மகாகவி பாரதியார்.. பாஞ்சாலி சபதம்
அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான்.
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்கு துடிக்கச் சினத்தின்
வெறி தலைக்க, மதிமழுங் கிப்போய்
வேந்தன் இஃது விளம்புத லுற்றான்:
‘நன்றி கெட்ட விதுரா, சிறிதும்
நாண மற்ற விதுரா,
தின்ற உப்பினுக்கே நாசந்
தேடுகின்ற விதுரா,
அன்று தொட்டு நீயும் எங்கள்
அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான் எந்தை
மதியை என்னு ரைப்பேன்!
‘ஐவருக்கு நெஞ்சும் எங்கள்
அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே, விதுரா,
செய்து விட்ட தேயோ?
மெய்வகுப்பவன்போல், பொதுவாம்
விதி உணர்ந்தவன்போல்,
ஐவர் பக்க நின்றே, — எங்கள்
அழிவு தேடு கின்றாய்…
கதை படித்தோம்
கதை பிடித்தோம்
அமர் புரிந்தோம்
அறம் மறந்தோம்..
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (குறள் – 32)
அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை
— புலியூர்க் கேசிகன்
There is no greater gain than virtue.
No surer path to ruin than its neglect.