Skip to content

எழுத்தாளர் ஜனனி ரமேஷ்

எழுத்தாளர் ஜனனி ரமேஷ் (16.09.1959)

திரு ஜனனி இரமேஷ் அவர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி திருமதி ஜெயலட்சுமி தம்பதியருக்கு 16-09-1959இல் பட்டுக்கோட்டையில் பிறந்தார். படித்து, வளர்ந்து, பணியாற்றி, வசிப்பது எல்லாம் சென்னையில்தான்.

ஓய்வு பெற்ற காப்பீட்டுத் துறை அதிகாரியான இவரின் பதினாள்காம் வயதில்கல்கிகுழுமத்தைச் சேர்ந்தகோகுலம்சிறுவர் இதழில் முதல் சிறுகதை வெளியானது. ஆங்கிலமும் தமிழும் அறிந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சட்டம், இலக்கியம், வரலாறு, வர்த்தகம், அரசியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் பட்டங்கள் பெற்றவர்.

அகில இந்திய வானொலியில் இவரது சிறுகதைகளும், கவிதைகளும். பிரபலங்களுடனான தேர்காணல்களும் ஒலிபரப்பாகி உள்ளன. ‘இதயம் பேசுகிறதுமற்றும்ஆனந்த விகடன்குழுமத்தின்ஜூனியர் போஸ்ட்‘, ‘விகடன் பேப்பர்‘, ‘நாணய விகடன்‘, கோகுலம் (கல்கிக் குழுமம்), ஆழம் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். ”விகடன்.காம்இணையதளம் தொடங்கப்பட்ட நாள் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகாலம் தினந்தோறும் வணிகச் செய்திகள் வழங்கியுள்ளார். தமிழ் இந்து (மாயாபஜார்), தினமலர் (தினமலர் பட்டம்), அமுதசுரபி, வலம் மற்றும் தொழில், மருத்துவம், வணிகம், கட்டுமானம் உள்ளிட்ட துறை சார்ந்த பத்திரிக்கைகளில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

இலக்கியம் (1), வாழ்க்கை வரலாறு (5), நாட்டுவரலாறு (5), புதினம் (2), சிறுவர் இலக்கியம் (8) என இருபத்திரண்டு நூல்களுக்கும்மேல் எழுதியவர். எழுதிக்கொண்டே இருப்பவர். தமிழறிஞர்கள், திருவள்ளுவர், இந்திய சீனப் போர், முசோலினி ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995