Skip to content

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்

உலகெங்கும் இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொகுக்கும் பணியை “உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்: தொகுப்புத் திட்டம்” ( https://estore.valaitamil.com/product/thirukkural-translations-in-world-languages/ )குழு ஐந்து ஆண்டுகளில் வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், அடுத்த இலக்காக மற்றொரு குழு இதுவரை திருக்குறள் சார்ந்து உலக நாடுகளில் வெளிவந்துள்ள சுமார் 7000 திருக்குறள் நூல்களைத் தேடித் தொகுக்கும் பணியில் இறங்கியுள்ளது. உங்கள் அனைவரது ஒத்துழைப்போடும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இதைச் செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இது ஒரு வரலாற்றுப் பணி.. வாருங்கள் .. ஊர் கூடித் தேரிழுப்போம்.

நூல் ஒருங்கிணைப்புக் குழு:
முனைவர். திருமலை ராஜா
முனைவர். மெய்.சித்ரா