Skip to content

அ. திருமதி டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன்

. திருமதி டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன் (10.05.1950)

திருமதி டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன் அவர்கள் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் பலாலியில் திருமதி பர்வதவர்தினி அம்மையாருக்கும் திருமிகு ஜம்புகேஸ்வரர் குருக்கள் இணையருக்கு மகளாக 10.05.1950 அன்று பிறந்தவர்.

இலங்கை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்றார்.

இளங்கலை, முதுகலை, இசை முதுகலை, இதழியல் மற்றும் தொடர்பியல் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் என ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு பட்டங்களைப் பெற்று சிறந்தவர்.

இலங்கை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பணியாற்றினார். தற்போது கனடா நுண்கலைப் பிரிவுத் தலைவராக 2011 முதல் பணியாற்றி வருகிறார். இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது. தமிழ்நாடு அரசு விருது. கனடா அரசின் விருது என 6 விருதுகள் பெற்றவர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், மூன்று நூல்கள் எழுதியுள்ளார். இசைத்தமிழின் வரலாற்று கட்டமைப்பைப் பற்றிய ஆய்வுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். இவரது முனைவர் பட்ட ஆய்வு நூலானதமிழில் இசைப்பா வடிவங்கள்பஞ்சமரபை மையப்படுத்திய ஒரு நுண்ணாய்வு ஆகும்.

இவரது இசைத்தமிழ் சிந்தனைகள் என்ற தொகுப்பானது இசை மரபின் நீண்ட ஆய்வுப் பயணத்தின் இருவேறு வளர்ச்சிக் கட்டங்களை உணர்த்துவனவாகும். அதன் தொடர்ச்சியாக இன்றும் இசைத்தமிழ் வளர்ச்சிக்குப் புதிய வெளிச்சம் தரக்கூடிய ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டுவருகிறார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995