அறிஞர் அ. ங்கரவள்ளி நாயகம் (01.03.1936 – 29.05.2008)
01-03-1936 அன்று பிறந்தவர். 29-05-2008 அன்று மறைந்தவர். இவர் பிறந்த இடம் சங்கரன்கோயில். பாளையங்கோட்டை நாங்குநேரியில் கல்வி கற்றவர். கோயிற்பட்டியில் உள்ள கோ.வெ.நா.கல்லூரி, கே.ஆர். கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ‘வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர். வ.உ.சி.யும் தமிழும், திருக்குறள் தெளிவுரை, வள்ளுவப் பேரொளியார், தமிழ் அமுது, தமிழ்க் குமுகாயம், வ.உ.சி.யும் இலக்கியமும் ஆகிய ஆறுநூல்களை எழுதியவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக கோயில்பட்டி நகரின் திருவள்ளுவர் மன்றத் தலைவராகத் தொண்டாற்றியவர்.
திருக்குறள் வேள், குறள்நெறி பரப்பும் குரிசில், குறள் பரப்பும் செம்மல், வ.உ.சி. விருதறிஞர், குறள் உரைச் செம்மல், தமிழ் இலக்கிய சிந்தனையாளர் என்ற விருதுகள் இவரைத் தேடிவந்து சிறப்பித்தன.
இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் தந்து ஈடுபடச் செய்து இலக்கியச் சுவையை மாந்தச் செய்தார். தமிழ்த் திருமணங்கள் செய்து வைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர். “தமிழால் உணர்வாள்வோம், குறளால் உலகாள்வோம்” என்பது இவரது தாரக மந்திரம். 70 வயதுவரை இறை மறுப்புக் கொள்கையில் பயணித்தவர். வாழ்வின் இறுதி இரண்டு ஆண்டுகள் இறைப்பற்றாளராக வாழ்ந்து மறைந்தவர். இவரது நூல்களை 2021 இல் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது